1. உங்கள் குழந்தைக்கான சிறந் ...

உங்கள் குழந்தைக்கான சிறந்த day care மையத்தை தேர்வுசெய்ய 9 குறிப்புகள்

All age groups

Kiruthiga Arun

5.6M பார்வை

5 years ago

உங்கள் குழந்தைக்கான சிறந்த day care மையத்தை தேர்வுசெய்ய  9 குறிப்புகள்
பாலர் பள்ளி

இந்த தலைமுறை பெண்கள் நிறைய பேர் வேலைக்கு போறவங்களா தான் இருக்காங்க. அதனால டே-கேர் தவிர்க்க முடியாத ஒண்ணா ஆயிடுச்சு. அதிலும் நாம நம்ம குழந்தையை விடற இடம் எப்படி இருக்கணும்னுகிறதுல நிறைய கேள்விகள், எதிர்பார்ப்புகள் இருக்கும். 

தினப்பராமரிப்பு மையத்தைத் தேர்வுசெய்ய 9 பயனுள்ள உதவிக்குறிப்புகள்

More Similar Blogs

    #1. குளிரூட்ட பட்ட அறை வேண்டாம் 

    நான் ரொம்ப முக்கியமான ஒரு விஷயமா நினைக்கிறது கண்டிப்பா AC இருக்கிற இடத்தை தவிர்க்கணும்கறது தான். காரணம் என்னன்னா நாம வீட்ல இருக்கும் போது எல்லா நேரமும் AC பயன்படுத்தறது இல்லாத போது ஏன் டே-கேர் மையத்துல மட்டும் இருக்கணும்னு எதிர்பார்க்கணும். நிச்சயமா நம்ம குழந்தைக்கு அது நல்லதில்ல. எப்போதுமே இயற்கையான காற்று தான் எல்லாருக்குமே நல்லது. அதனால விசாலமான இடமாகவும், காற்றோட்டமான இடமாகவும் மையத்தை டே-கேர்  தேர்ந்தெடுப்பதே நல்லது.

    #2. உங்கள் குழந்தையின் டே-கேர் மையம் எங்கு இருக்க வேண்டும் 

    டே-கேர் மையத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது உங்கள் அலுவலகத்திற்கு அல்லது உங்கள் வீட்டின் அருகில் இருக்குமாறு தேர்ந்தெடுங்கள். அல்லது உங்கள் உறவினர் வீட்டின் அருகில் இருக்குமாறு பாத்துக்கோங்க . அப்பொழுதுதான் குழந்தைக்கு உடல் நலம் முடியாமல் இருக்கும் போது நம்ம எளிதாக அந்த இடத்திற்கு செல்ல முடியும்.

    #3. நீங்கள் ஒரு டே-கேர் மையத்திற்கு சென்று விசாரிக்கும் பொழுது மிகவும் கவனமாக சில விஷயங்களை பார்க்க வேண்டும். 

    #4. அங்கு வேலை செய்பவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளிடம் எப்படி பழகுகிறார்கள்? 

    குழந்தைகளை பராமரிக்கிறவங்க நிச்சயமாக குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து விளையாடி கொண்டு இருக்க வேண்டும். அவங்க குழந்தைகளோடு எவ்வளவு நெருக்கமாக பழகுறாங்க என்பதையும் கவனியுங்க. ஏனென்றால் குழந்தைகளின் ஆரம்ப காலங்களில் அவங்களுக்கு அன்பான நெருங்கிய உறவுகள் தேவைப்படுது. 

    #5. பராமரிப்பாளர்களில் அடிக்கடி மாற்றம் ஏற்பட்டால் குழந்தைங்க பாதுகாப்பு இல்லாம உணர்வாங்க. அதனால நீங்க குழந்தையை அங்க விடுறதுக்கு முன்னாடியே பராமரிக்கிறவங்க எத்தனை வருஷங்களா அங்க வேலை செய்றாங்க அது எல்லாத்தையும் கேட்டு தெரிஞ்சிக்கோங்க. 
    குழந்தைகளை எப்போது தூங்க வைக்கிறாங்க? எங்க தூங்க வைக்கிறாங்க? ரொம்ப அடம் இல்ல அழுகிற குழந்தைகளை எப்படி சமாளிக்கிறாங்க? இந்த மாதிரி நிறைய கேள்விகள் கேக்கணும். எவ்வளவு கேள்வி கேக்கறோமோ அந்த அளவுக்கு நமக்கு நல்லது. பின்னாடி நாம கவலை பட வேண்டிய அவசியம் இருக்காது.

    #6. பிற பெற்றோர்கள் அல்லது நெருக்கமானவர்கள் கிட்ட ஒருமுறை அந்த டே-கேர் மையத்தை பற்றி விசாரிக்கிறதும் நல்லது. 

    #7. நம்ம குழந்தை பராமரிக்கும் சூழல் முக்கியமா சுத்தமாக இருக்கணும்.  
    குழந்தைகளுக்கான பாதுகாப்பு முறைகளை பின்பற்றக்கூடிய  இடமாகவும் இருக்கணும்.

    குழந்தைகளின் வயதை பொறுத்து அவங்களுக்கான பொம்மைகள் மற்றும் புத்தகங்கள் இருக்கா என்பதை கவனியுங்கள்.

    சின்ன குழந்தைகளுக்கு என்று தனியாக இடம் உள்ளதா என்பதை கவனியுங்கள். ஏன்னென்றால் வயதில் பெரிய குழந்தைகள் விளையாடும் பொருட்கள் சிறியதாக இருக்கும். அதை சின்ன குழந்தைகள் விழுங்கிவிடலாம். அதனால் சின்ன குழந்தைகளுக்கு என்று தனியாக இடம் இருப்பது மிகவும் அவசியம்.

    #8. வேற வேற நாள்ல வேற வேற நேரத்துல அந்த பராமரிப்பு மையத்தை சென்று பாருங்க. அப்போதுதான் அவங்க குழந்தைகளோட எப்படி பழகுறாங்க என்பது நமக்கு தெரியும்.

    #9. உங்கள் குழந்தை பேச ஆரம்பிக்கிற வர தினமும் உங்க குழந்தையை கவனிக்கிறவங்க கிட்ட பேசுங்க. பாப்பாக்கு என்ன சாப்டா கொடுத்தாங்க?  எப்போ கொடுத்தாங்க? எப்போ தூங்கவெச்சாங்க ? இன்னைக்கு குழந்தை இப்படி இருந்தது? இப்படி தினமும் பேசுறது ரொம்ப முக்கியம். 

    அப்போதான் நமக்கு அவங்க குழந்தைகிட்ட எப்படி பழகுறாங்கன்னு தெரியும். நம்ம குழந்தை அவங்க கூட எப்படி இருக்கும்னு தெரியும். 
    அதே மாதிரி இது இல்லாம நம்மளோட உள் உணர்வுக்கு நிச்சயமா தெரியும் ஏதோ தப்புனு. அப்படி தெரிஞ்ச யோசிக்காம உங்க பராமரிப்பு மையத்தை மாத்திடுங்க.     

    எப்போதும் குழந்தையோட ஆரோக்கியமும் சந்தோஷமும் மட்டுமே நமக்கு  முக்கியம் என்பதால் மெனக்கிடுதல் அவசியம். அப்போது தான் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்ற திருப்தி நமக்கு ஏற்படும்.

     

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)

    Related Blogs & Vlogs