பிரசவித்த பின் வரும் தழும ...
பிரசவத்திற்கு பின் வரும் தழும்புகள் தவிர்க்க முடியாதது. எல்லா பெண்களுக்கும் அது ஏற்படும். கர்ப்ப காலத்தில் குழந்தை உள்ளே வளர்வதற்காக உடல் வேகமாக வளர்ந்து விரிவடையும். அதே சமயம் குழந்தை பிறந்தவுடன் வயிற்றில் இருந்த இறுக்க தன்மை குறைந்து தோல் சுருக்கமாகவோ அல்லது வயிற்றில் தழும்புகள் ஏற்பட்டது போலவோ காணப்படும்.இந்த தழும்புகள் குறித்த கவலை பெரும்பாலான பெண்களுக்கு இருக்கிறது. கவலை வேண்டாம் இந்த தழும்புகளை சில எளிய வழிகள் மூலம் சரி செய்யலாம்.
பிரசவ தழும்புகளை போக்குவதற்கு கொஞ்சம் ஆயிலை எடுத்து மெதுவா வயிறு மற்றும் இடுப்பு பகுதிகள்ல தடவுங்க. உள்ளங்கையில எண்ணெயை எடுத்துக்கிட்டு வயிற்றுல ஒரு பகுதில இரண்டு நிமிஷம் வரை மசாஜ் செய்யணும். அதுக்கு அப்புறம் இதே மாதிரி அடுத்த பகுதில செய்யணும். மசாஜ் செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகமா இருக்கும் இதனால செல்கள் வேகமாக செயல்பட ஆரம்பிச்சு தழும்புகள் சீக்கிரமா மறைஞ்சுடும். அதுமட்டுமில்லாம மசாஜ் செய்றதுக்கு பத்து நிமிஷம் முன்னாடி இளஞ்சூடான தண்ணீர்ல குளித்தால் இன்னும் சீக்கிரமாகவே சரியாயிடும்.
தண்ணீர் குடிப்பதற்கும் பிரசவ தழும்புக்கும் என்ன சம்பந்தம்னு நீங்க நினைக்கலாம். ஆனா ரெண்டுக்கும் நிறைய தொடர்பு இருக்கு. பொதுவாகவே தண்ணீர் குறைவா குடிக்கிறவங்களுக்கு தோல் சுருங்கியும், டிரையாகவும் இருக்கும். நம்ம உடம்புல எப்போதும் நீர்ச்சத்து சரியான அளவுல இருக்கிறது ரொம்ப அவசியம். தண்ணீர் அதிகமா குடிக்கிறதால செல்கள் அதிக வேகமா செயல்பட ஆரம்பிக்கும். உடைந்த திசுக்களை அது சரி செய்றதால தழும்புகளும் மறைஞ்சிடும்.
மாய்ஸ்சரைஸர் க்ரீம் பயன்படுத்துறதால சீக்கிரம் தழும்புகள் மறைவதற்கான வாய்ப்புகள் இருக்கு. ஸ்கின் டிரை ஆகாம வைக்கிறதால தழும்புகள் மறையும். ஆனால். இது போன்ற க்ரீம்களை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் ஒரு சில க்ரீம்களை தாய்ப்பால் கொடுக்கும்போது பயன்படுத்தக் கூடாது.
கர்ப்பத்திற்கு பிறகு ஏற்படும் பிரசவ தழும்புகளை சரி செய்ய யோகா மற்றும் உடற்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாக்கிங், யோகா போன்ற லேசான உடற்பயிற்சி கூட இடுப்பு, தொடை மற்றும் வயிற்றுப் பகுதிகளில் இருக்கும் தசைகளை வலுப்படுத்தும். தசைகள் வலுவானால், தளர்ந்து போன சருமம் சரியாகி விரைவில் குணமாகும்.
முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன், பொட்டாசியம், ரிபோஃப்ளேவின் மற்றும் மெக்னீஷியம் போன்ற நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் பிரசவ தழும்புகளை போக்க மிகவும் உதவியாக இருக்கின்றன.
உடைந்த திசுக்களை சரிசெய்வதற்கும் வளர்ச்சிக்கும் புரோட்டீன் மிகவும் முக்கியமாகும்.
சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவியாக இருக்கும்.
சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.
சருமத்தை இளமையாக வைக்க உதவுகிறது.
வீட்டில் உள்ள சில எளிய பொருட்கள் கொண்டு தழும்புகள் மறைய வைக்கலாம். அதற்கான செயல்முறைகளை தொடர்ந்து பார்க்கலாம்.
Ø முட்டை வெள்ளை கருவை எடுத்துக்கொள்ள வேண்டும்
Ø அதை ஒரு கிண்ணத்தில் நன்றாக அடித்து வைத்துக்கொள்ள வேண்டும்
Ø தழும்புகள் இருக்கும் இடத்தை இளஞ்சூடான தண்ணீரால் நன்றாக கழுவ வேண்டும்
Ø பின் அடித்து வைத்திருக்கும் முட்டை வெள்ளையை தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்
Ø 15 நிமிடங்களுக்கு பிறகு திரும்பவும் இளஞ்சூடான தண்ணீரால் கழுவ வேண்டும்
Ø இப்படி செய்தால் தழும்புகள் சீக்கிரம் மறைந்துவிடும்.
கற்றாழை ஜெல்லை எடுத்து நேரடியாக தழும்புகள் இருக்கும் பகுதிகளில் தடவுனால் தழும்புகள் மறைந்து விடும். கற்றாழை சருமத்தை மென்மைப்படுத்தும்.
கடையில் விற்கப்படும் ஜெல்லை பயன்படுத்த கூடாது. சுத்தமாக கற்றாழை செடியில் இருந்து வரும் ஜெல்லை பயன்படுத்த வேண்டும். இதனை தினமும் இரண்டு முறை தடவலாம்.
சுத்தமான மலை தேனை எடுத்து ஒரு துணியில் ஊற்றி அதை தழும்புகள் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். அது காய்ந்தவுடன் இளஞ்சூடான தண்ணீரால் கழுவினால் சீக்கிரம் பிரசவ தழும்புகள் குணமடைந்து விடும்.
அல்மெண்ட் ஆயிலோடு ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரையை மிக்ஸ் செய்ய வேண்டும். அத்தோடு கொஞ்சம் எலுமிச்சை சாறையும் சேர்த்து குளிப்பதற்கு முன்னால் தடவ வேண்டும். ஒரு மாதம் முழுவதும் இதனை செய்து வந்தால் பிரசவ தழும்புகள் மறைந்து விடும்.
லெமன் ஜூஸை கையில் எடுத்து பிரசவ தழும்பு இருக்கும் இடத்தில் நன்றாக தடவ வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான தண்ணீரால் கழுவ வேண்டும். தினமும் ஒரு முறை இதை செய்தால் பிரசவ தழும்பில் இருந்து சீக்கிரம் விடுபடலாம்.
இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இந்தப் பதிவை பற்றிய கருத்துக்களை கீழே கமெண்ட்ல சொல்லுங்க. இது போல உங்களுக்கு ஏற்பட்ட பிரசவ தழும்புகளை நீங்க எப்படி சரி செய்தீங்க என்பதை எங்களுக்கு ஷேர் பண்ணுங்க..
Be the first to support
Be the first to share
Comment (0)