1. பகிர்ந்து கொள்ள உங்கள் க ...

பகிர்ந்து கொள்ள உங்கள் குழந்தைக்கு கற்பிக்க 8 வழிகள்

3 to 7 years

Kiruthiga Arun

2.7M பார்வை

3 years ago

 பகிர்ந்து கொள்ள உங்கள் குழந்தைக்கு கற்பிக்க 8 வழிகள்
நோய் மேலாண்மை மற்றும் சுய பாதுகாப்பு
நடத்தை

இப்போது நம்ம தலைமுறையில் யாரும் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்வது அரிது தான். இதனால நம்ம குழந்தைங்க  அவங்களுக்குக்கென ஒரு உலகத்துல வாழுறாங்க. அதனால குழந்தைங்க தனக்கு  தான் முன்னுரிமை தரணும்ன்னு எதிர்பார்க்கிறாங்க. அது மட்டும் இல்லாம இப்போது பகிர்தலுக்கான வாய்ப்புகளும் குறைவாக தான் இருக்கு. பெற்றோர் நாமும் குறைவாக தான் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறோம்.

Advertisement - Continue Reading Below

 

More Similar Blogs

    இதனால மற்ற குழந்தைங்க கூட விளையாடும் போது பகிர்தலுக்கான வாய்ப்புகள் குறைவா இருக்குது. பகிர்தல் குறையும் பொழுது குழந்தைகளுக்குள் சண்டை, பிரிவு ஏற்படுகிறது.  நட்புகள் குறைவதற்கும் வாய்ப்புகள் இருக்குது. குழந்தைங்க நம்ம (பெற்றொர்) கிட்ட இருந்து தான் எல்லா விஷயங்களையும் கத்துக்கிறாங்க.நம்ம அவங்களுக்கு எப்படி பகிர்தலை சொல்லி கொடுக்கணும் என்பதற்கான சில குறிப்புகளை இப்போது பாக்கலாம்.தொடக்க பள்ளி செல்வதற்கு முன்பிருந்தே பகிர்தலை அவங்களுக்கு சொல்லித் தருவது அவசியம்.

    குழந்தை பகிர்வை எவ்வாறு கற்பிப்பது?

    குழந்தைகளை பொறுத்தவரையில் அவர்களை உட்கார வைத்து சொல்லிக் கொடுப்பதெல்லாம் பலன் தராது. விளையாட்டு, கதைகள், பெற்றோரின் பகிர்தல் குணம் போன்றவைகள் மூலமாக குழந்தைகள் இயல்பாகவே பகிர்தலை பற்றி அறிந்து கொள்வார்கள். கீழ்காணும் வழிகள் உங்கள் உதவும். 

    1. நான் என் குழந்தையோட விளையாடும் பொழுது பலிர்தலை கற்றுக் கொடுப்பேன். சில சமயங்களில் ஒரு பொருளை வைத்து விளையாடும் பொழுது இதன் மூலமா பகிர்ந்து விளையாடணும் என்கிற விஷயத்தை இயல்பாக அவளுக்கு புரிய வைப்பேன். 
    2. வீட்டுக்கு  நண்பர்கள் வரும் போது கண்டிப்பாக இது தொடர்பான சண்டைகள் வரும்.  இதை நமக்கான சந்தர்ப்பமா நினைச்சு விளையாட்டுகள் மூலமா நண்பர்களுக்குள்ள பகிர்தலை உருவாக்கலாம் . உதாரணத்திற்கு பகிர்தலை மையப்படுத்தி இருக்கிற கதைகளை அவர்களுக்கு சொல்லலாம்.
    3. அதே மாதிரி மத்த குழந்தைகள் வீட்டுக்கு வந்து விளையாடுறதுக்கு முன்னாடியே நம்ம குழந்தை கிட்ட சொல்லிடனும். நீ உன் பொருளை அவங்களுக்கு தந்தா தான் அவங்க உன் கூட விளையாடுவாங்கன்னு, அப்போ குழந்தைக்கு இயல்பாகவே புரியும் பகிர்தலின் அர்த்தம். என் பெண்ணும் அப்படி தான். அவ விளையாடும் பொருளை என் தங்கை குழந்தைக்கு தர மாட்டா. அந்த சமயத்துல நான் என் தங்கை குழந்தைக்கு வேறொரு விளையாட்டு பொருளை தந்து விளையாட சொல்லுவேன். அப்போ தான என் குழந்தைக்கு அந்த விளையாட்டு பொருள் மேல ஆர்வம் வரும். அப்போ நான் சொல்லுவேன் நீ உன் பொருளை அவளுக்கு தராத போது அவ மட்டும் தருவானு நீ எதிர்ப்பாக்கிறது தப்புனு.  இப்போ அவளுக்கு பகிர்தலின் முழு அர்த்தம் புரியாவிட்டாலும், நாம ஒன்றை கொடுத்தா தான் நமக்கு கிடைக்கும் என்ற வகையிலாவது அவளுக்கு புரியும்னு நம்புறேன்.
    4. வீட்டில் இருந்து தான் பகிர்தலை குழந்தைங்க கற்றுக் கொள்கிறார்கள். அதனால் நீங்க அவங்களுக்கு பிடிச்சதை சாப்பிடும் பொழுது அவங்களுக்கு குடுத்துட்டு சாப்பிடுங்க. அதே மாதிரி குடும்பத்தில் எல்லாரும் இருக்கும் பொழுது சாப்பிடும் திண்பண்டங்களை அவங்க கிட்ட கொடுத்து எல்லாருக்கும் பகிர்ந்து தர சொல்லுங்க. இந்த பழக்கம் நிச்சயமா உங்க குழந்தைக்கும் பிடிக்கும் அதே மாதிரி பகிர்தலின் அவசியத்தையும் புரிய வைக்கும். 
    5. ஒப்பிடுதல் குழந்தைங்களுக்கு பிடிக்காதுதான். ஆனா நம்ம சொல்றா விதம் முக்கியம். மத்த குழந்தைங்க பகிர்ந்து விளையாட்றத காமிக்கலாம். அதனால அவங்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பதை சொல்லலாம். அப்போ நிச்சயமா நம்ம குழந்தைங்களுக்கு புரியும் 
    6. பகிர்ந்து விளையாடும் விளையாட்டுகளை அறிமுகம் படுத்துங்க. நிறைய பேர் சேர்ந்து பகிர்ந்து விளையாடும் பொழுது உங்கள் குழந்தையும் அவங்கள அறியாம பகிர்ந்து விளையாட பழகிடுவாங்க. உதாரணத்திற்கு சின்ன வயசில நம்ம விளையாடின கூட்டாஞ்சோறு சொல்லலாம். எல்லோரும் சேர்ந்து சமைச்சு, அதன் பிறகு அந்த கொஞ்சத்தையும் நண்பர்களோடு பகிர்ந்து விளையாடும் விளையாட்டு பகிர்தலுக்கு பெரிய எடுத்துக்காட்டுனு சொல்லலாம். 
    7. குழந்தைங்க மத்தவங்கள் கூட பகிர்ந்து விளையாடுவதை பார்த்தீங்கன்னா நிச்சயமா எல்லார் முன்னிலையிலும் அவங்களை பாராட்ட மறந்துடாதீங்க. அது தான் அவங்களுக்கு ஊக்கம் தரும். மறுபடியும் அந்த பாராட்டுக்காக அதை பின்பற்ற முன்வருவார்கள்.
    8. விஷேசங்களும், பண்டிகைகளும் பகிர்தலை குழந்தைகளுக்கு இயல்பாக கற்றுக் கொடுக்கும் வாய்ப்புகளை அதிகமாக உருவாக்கி தரும் தருணங்கள். தீபாவளி, பொங்கள் பண்டிகைகளில் உங்க வீட்டு பலகாரத்தை உங்க குழந்தைகளையே எடுத்து வைக்க சொல்லி அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க, அவங்களோட நண்பர்கள் கிட்ட கொடுத்து வர சொல்லுங்க. பகிர்தலை கற்றுக் கொள்வதோடு அது அவர்களுக்கு இனிமையான தருணமாக அமையும்.

     

    குழந்தைகளுக்கு பகிர்தலை சொல்லிக் கொடுக்க நிறைய வழிகள் இருக்கு. ஆனா அறிவுரை மூலமாகவோ, கண்டித்தோ இந்த பழக்கம் வரக்கூடாது ஏன்னா அது அவர்களின் வாழ்வின் கடைசி வரையிலும் நிலைத்து நிற்காது. அவர்களின் அன்றாட வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் மூலமா, விளையாட்டு மூலமா, நட்பு வட்டம் மூலமா உருவாகும் வாய்ப்பை பெற்றோர் நாம் தான் உருவாக்கி கொடுக்க வேண்டும்.

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)