1. குளிர்காலத்தில் உங்கள் கு ...

குளிர்காலத்தில் உங்கள் குழந்தைக்களுக்கு கொடுக்க வேண்டிய 7 உணவுகள்

All age groups

Bharathi

3.1M பார்வை

3 years ago

குளிர்காலத்தில் உங்கள் குழந்தைக்களுக்கு கொடுக்க வேண்டிய 7 உணவுகள்
டயப்பர் பராமரிப்பு
கண் பாதுகாப்பு & பார்வை
பொழுதுபோக்கு வகுப்புகள்
கற்றல் குறைபாடு

குளிர் காலம் வந்தாலே பெற்றோர் நாம் குழந்தைகளின் உணவில் அதிக கவனம் எடுக்க தொடங்கிவிடுவோம். குறிப்பாக ஒவ்வொரு தாயும் எதிர்கொள்ளும் முக்கிய போராட்டங்களில் ஒன்று, தங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பிரச்சினைகள். குறிப்பாக குளிர்காலத்தில் தங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை எவ்வாறு வலுப்படுத்துவது என்று அடிக்கடி கவலைப்படுவதுண்டு. காரணம், குளிர் காலம் மற்றும் வானிலை மாற்றம் குழந்தைகளுக்கு பல உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றது. ஆரோக்கியத்தை காக்க உதவும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி உணவுகளை முயற்சிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை சமநிலைப்படுத்தலாம்.

ஆரோக்கியமான குளிர்கால உணவுகளை உண்பது உங்கள் குழந்தைகளை நோயின்றி மற்றும் சூடாக வைத்திருக்க உதவுகிறது. உங்கள் குழந்தையின் உணவில் சேர்க்க வேண்டிய 7 உணவுகள் அதன் செயல்முறையோடு பகிர்ந்து கொள்கிறேன் இங்கே:

More Similar Blogs

    1. மினி இட்லி பெப்பர் ஃப்ரை

              இந்த மினி டெம்பர்ட் இட்லிகள் சுவையான வேகவைக்கும் சூடான இட்லிகளுக்கு பதில் கொடுக்கலாம். பெப்பர் குழந்தைகளுக்கு நல்லது இட்லிப் பொடி, மிளகுத் தூள் சிறிது சேர்த்து செய்யலாம்.  இதனுடன் சாம்பார், சட்னி தேவையில்லை. எஞ்சியிருக்கும் இட்லிகளைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழி - இந்த செய்முறையானது ஆரோக்கியம், சுவை  ஒரே நேரத்தில் கொடுக்கின்றது!

    செய்முறை

          மீதமுள்ள இட்லிகளை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொண்டு அடுப்பில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பின் வெட்டி வைத்த இட்லிகளை போட்டு சிறிது இட்லி பொடி,மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இட்லி ஃப்ரை தயார்.

    2.திரவங்கள்:

          சூப், மசாலா டீ, க்ரீன் டீ, , பருப்பு போன்ற ஏராளமான சூடான திரவங்களை சேர்த்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அவை நீரேற்றத்திற்கு நல்லது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு சிறந்தது.அதிலும் தூதுவளை, கொள்ளு என மூலிகை வகை சூப்களை தேர்வு செய்யுங்கள். இது மாலை வேளையில் குடிப்பதற்கு அற்புதமான பானமாக இருக்கும்.

    3.நட்ஸ்

    சீசன் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க சில முந்திரி, பாதாம், வேர்க்கடலை, பிஸ்தா மற்றும் அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். நட்ஸ் மற்றும் விதைகள் புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் ஏற்றப்படுகின்றன. நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிக்க ஒவ்வொரு பருவத்திலும் நீங்கள் அவற்றை உட்கொள்ள வேண்டும். குழந்தைகள் கூட கொட்டைகளை விரும்பி உணவில் சேர்த்துக்கொள்வது அவர்களின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். அவை நாள் முழுவதும் அவர்களுக்கு ஹெல்தி ஸ்நாக்ஸாக மாறும் .

    4. பாகற்காய்

    பாகற்காய் வைட்டமின் சி மற்றும் வைரஸ் தடுப்புச் சத்து நிறைந்தது. எனவே, அடுத்த முறை உங்கள் அம்மா சமைக்கும் போது, சுவைத்துப் பாருங்கள். நீங்கள் அதை வேகவைத்து, மற்ற பருவகால காய்கறிகளுடன் சுண்டவைக்கலாம் அல்லது வறுத்தெடுக்கலாம். எந்த வடிவத்தை நீங்கள் விரும்புகிறீர்களோ அல்லது பிடிக்கவில்லையோ, அதை இப்போது உங்கள்  உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு வறுவல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

    ஆம்லா/ஆரஞ்சு - இவை வைட்டமின் சி நிறைந்த சப்ளிமெண்ட்ஸ் ஆகும், அவை மிகவும் சத்தானவை மற்றும் மிட்டாய் அல்லது சப்பாத்திக்குள் வைத்து ஸ்டஃப் செய்து  தயாரிக்கலாம். இது பொதுவான காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கும், கோவிட்-19ஐ திறம்பட எதிர்த்துப் போராடுவதற்கும் முக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

    5. இஞ்சி பச்சடி

    தேவையான பொருட்கள்

    இஞ்சி          - 100 கிராம்

    மிளகாய் வற்றல் - 6-7

    தேங்காய்     - சிறிது

    உளுந்து பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

    காயம்           - சிறிது

    புளி.               - நெல்லிக்காய் அளவு

    செய்முறை

    1. புளியை ஊற வைக்கவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.
    2. அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகாய் வற்றல், உளுந்து பருப்பு, இஞ்சி, காயம், தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
    3. இதை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
    4. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பின் புளி கரைசல் சேர்த்து,  அரைத்த விழுதை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
    5. இறுதியில் சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும்.
    6. சுவையான இஞ்சி பச்சடி தயார்.

    6. சுக்கு வெந்நீர்

    தேவையான பொருள்கள்

    • சுக்கு - கால் கப் அளவு
    • மிளகு - சுக்கு அளவில் பாதி அளவு
    • கொத்துமல்லி விதைகள் - அரை கப்

    செய்முறை

    சுக்கை சுத்தம் செய்து உரலில் இட்டு நசுக்கி வைக்கவும். கொத்துமல்லி விதைகளை சுத்தம் செய்து வைக்கவும். அனைத்தையும் சேர்த்து நன்றாக பொடிக்கவும். ஈரம் படாமல் பார்த்துகொள்ள வேண்டும். கண்ணாடி பாட்டிலை சுத்தம் செய்து அதில்பொடியை சேகரித்துவைக்கவும். இந்த பொடி ஆறுமாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

    சுக்கு வெந்நீர் தயாரிப்பு

    அரை டம்ளர் சுக்கு மல்லி காபிக்கு ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து அதில் ஒரு டீஸ்பூன் அளவு சுக்கு மல்லி பொடி கலந்து கொதிக்கவிட்டு அதில் பனைவெல்லம் நாட்டுச்சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து குடிக்கலாம். இதுதான் சுக்கு மல்லி காபி என்றழைக்கப்படுகிறது.

    7. வெற்றிலை ரசம்

    • தேவையான பொருட்கள்
    • மிளகு         - 1 டேபிள்ஸ்பூன்
    • சீரகம்          - 1 டீஸ்பூன்
    • கொத்தமல்லி விதை - 1.5 டேபிள்ஸ்பூன்
    • மிளகாய் வற்றல் - 2
    • பூண்டு           - 6-7
    • கறிவேப்பிலை சிறிது
    • தக்காளி சிறியது

    செய்முறை

    1. முதலில் தக்காளியை வேக வைத்து தோல் உறித்து கரைத்து வைத்து கொள்ளவும்.

    2. மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

    3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பின் அரைத்த விழுதை சேர்த்து வதக்கி பின் கரைத்த தக்காளியை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து கொள்ளவும்.

    4. தேவையான அளவு உப்பு சேர்த்து இறக்கவும்.

    5.இறுதியில் வெற்றிலைகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சேர்த்து மூடி வைத்து கொள்ளவும்.

    6. சுவையான வெற்றிலை ரசம் தயார்.

    குளிர்கால சிறப்பான ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகளுக்கு அதிகமாக கொடுப்போம். நோய்களில் இருந்து நம்மையும், நம் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வோம்.

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)

    Related Blogs & Vlogs

    When is a Child ready for a Pet?

    When is a Child ready for a Pet?


    All age groups
    |
    2.2M பார்வை
    Celebrating Independence at 65

    Celebrating Independence at 65


    All age groups
    |
    11.4M பார்வை
    Raksha Bandhan - The Knot Of Love!

    Raksha Bandhan - The Knot Of Love!


    All age groups
    |
    2.3M பார்வை