குழந்தைகளுக்கு தேசப்பற்று ...
பெற்றோராக, தேசப்பற்றுள்ள குடிமக்களை வளர்ப்பது நாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமை. குறிப்பாக, தேசிய விழாக்களை ஊக்கப்படுத்தவும், உணர்த்தவும் பள்ளிகள் உதவும். ஆனால் இப்போது கொரோனா வைரஸ் காரணத்தால் பள்ளிகள் திறக்காததால் பெற்றோர் நாம் குழந்தைகளுக்கு தேசப்பற்றை வளர்க்க வேண்டும். இதை எளிமையாக செய்வதற்கான சில வழிகள் இங்கே பார்க்கலாம்.
தேசப்பற்று என்பது தாய்நாட்டின் மீதான அன்பும் மரியாதையும் ஆகும். இந்த உணர்வை குழந்தைகளிடம் விதைத்தால் நாளைய பொறுப்புள்ள குடிமக்களாக மாறுவார்கள். குழந்தைகளில் தேசபக்தியை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த சில எளிய மிகவும் உதவக்கூடிய குறிப்புகளைப் படிக்கவும்.
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் அதன் மதிப்புமிக்க பொக்கிஷம். அதன் வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. நம் நாடு எவ்வளவு பழமையானது என்று உங்கள் குழந்தையிடம் பேசுங்கள். நம் நாட்டின் வளமான பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் தொல்பொருள் கலைப்பொருட்களை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்லுங்கள். சென்னையிலுள்ள எழும்பூர் அருங்காட்சியகம், கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகம், புது தில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் மற்றும் மும்பையில் உள்ள பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் அருங்காட்சியகம் ஆகியவை இந்தியாவில் உள்ள சில முக்கியமான அருங்காட்சியகங்கள் ஆகும்.
நமது சுதந்திரப் போராட்ட கதைகள் உங்கள் குழந்தைக்கு நம் முன்னோர்களின் தியாகத்தைப் புரிய வைக்கும். மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், பண்டிட் நேரு, சர்தார் வல்லப்பாய் படேல், ஷஹீத் பகத் சிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வேலு நாச்சியார், ராணி லக்ஷ்மி பாய், கொடிகாத்த குமரன் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகளை அவர்களிடம் கூறுங்கள்.
இந்தக் கதைகள் அவர்களுக்கு வீரம், தியாகம், சுதந்திரம் மற்றும் சுயமரியாதையின் மதிப்புகளைக் கற்பிக்கும். உங்கள் குழந்தை ஆரம்பப் பள்ளி மாணவராக இருந்தால், அவருக்கு நமது சுதந்திர இயக்கம் பற்றிய எளிய விளக்கப் புத்தகங்களை அறிமுகப்படுத்துங்கள் (உதாரணமாக, அமர் சித்ர கதா தொடர்).
தேசிய கீதம், கொடி, விலங்கு போன்ற தேசிய சின்னங்களின் முக்கியத்துவத்தை உங்கள் குழந்தை அறிந்திருக்க வேண்டும். தேசிய கீதம் இசைக்கப்படும்போது அல்லது பாடும்போது எழுந்து நின்று அதை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகியவை நாம் கொண்டாடும் இரண்டு முக்கியமான தேசிய விழாக்கள். பள்ளியில் கொண்டாட்டங்களில் பங்கேற்க உங்கள் பிள்ளையை ஊக்குவிக்கவும். நீங்கள் வசிக்கும் பகுதியில் அணிவகுப்பு மற்றும் கொடியேற்றும் விழாக்களுக்கு அவர்களை அழைத்துச் செல்லலாம். மாறுவேட போட்டிகளில் உங்கள் குழந்தைகளுக்கு பெரிய தலைவர்களாகவும் அலங்கரித்து, அவர்கள் உச்சரிக்கும் சொற்றொடர்களை அவர்களுக்கு கற்பிக்கவும். மேலும், அவளுக்கு தேசபக்தி பாடல்களை கற்றுக்கொடுங்கள்.
குழந்தைகள் அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்கிறார்கள். விடுமுறையின் போது உங்கள் குழந்தையை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நினைவுச்சின்னங்களுக்கு அழைத்துச் செல்வது ஒரு சிறந்த செயலாகும். அமர் ஜவான் நினைவுச்சின்னம், வாகா எல்லை, ஜாலியன் வாலாபாக், சபர்மதி ஆசிரமம் மற்றும் நேதாஜி பவன் போன்ற நினைவுச் சின்னங்களைப் பார்வையிடவும். அந்த இடங்களின் முக்கியத்துவத்தை அவரிடம் சொல்லுங்கள், அதனால் அவர் தேசபக்தியை அனுபவிப்பார்.
உங்கள் குழந்தைக்கு தேசப்பற்றுடன் வளர்க்க, நீங்களும் தேசப்பற்று உணர்வோடு இருக்க வேண்டும். தேசபக்தி என்பது உணர்வுகளுடன் தொடர்புடையது, அறிவோடு அல்ல. நீங்கள் தேசபக்தியுடன் இருப்பதைப் பார்த்து குழந்தைகள் சில பண்புகளை வளர்த்துக் கொள்கிறார்கள். எனவே, ஒரு பொறுப்புள்ள குடிமகனின் நடத்தையை பின்பற்று உங்கள் குழந்தைக்கு ஒரு முன் மாதிரியாக செயல்படுங்கள். குழந்தைகள் முன் நம் நாட்டைப் பற்றி நகைச்சுவையாக கூட தவறாகப் பேசாதீர்கள்.
தேசப்பற்றுள்ள குழந்தைகளை வளர்ப்பதில் பங்களித்தால் நாளை நம் நாடு பாதுகாப்பான கரங்களில் இருக்கும். நமது விடுதலைக்காகப் போராடிய நம் முன்னோர்களின் விலைமதிப்பற்ற தியாகத்திற்கு இது நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.
Be the first to support
Be the first to share
Comment (0)