நீட் தேர்வில் வெற்றி பெற ...
சமீபத்தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவி தன்னோட அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அந்த விஷயங்களை இங்கே சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். குறிப்பாக, நீட் தேர்வுக்கு இந்த பெண்ணோட அப்பா அம்மா எப்படி ஆதரவாக, ஊக்கமாகவும் இருந்தாங்கன்னு சொல்லிருந்தது ரொம்ப ஊக்கமளிப்பதாக இருந்தது. அதை உங்களோடு இந்தப் பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் நீட் தேர்வுக்கு தயார்ப்படுத்த தொடங்கியதிலிருந்து பரிட்சை முடிவு வர வரைக்கும் ஒரு நிலையான ஆதரவை என்னோட பெற்றோர்கள் கொடுத்தாங்க. நான் ஒரு தேர்வில் குறைந்த மதிப்பெண் வாங்கியிருந்தேன், ஆனா அவங்க சொன்னது, பரவாயில்லை, அடுத்த தடவை நீ சிறப்பாக செய்து இலக்கை அடைய முடியும் என்று அவர்கள் என்னை சமாதானப்படுத்தினர். கடினமான தருணங்கள்ல என் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்கள்.
என்னை எப்போதும் படிக்க சொல்லி வற்புறுத்தவில்லை. உண்மையில், என் பிரச்சினைகளுக்கு எப்போதும் அவர்கள் ஒரு தீர்வைக் கொண்டு வருவாங்க. அதே மாதிரி நான் திசைத்திரும்ப கூடாது என்பதற்காக, அவங்க மொபைல் போன் பார்ப்பது, டிவி பார்ப்பதை குறைத்துவிட்டார்கள். மற்றும் நான் படிக்கும் போது ஒருபோதும் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொண்டனர்.
நீட் தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, நான் மிகவும் பதட்டமாக இருந்தேன், என்னால எதையுமே ரிவைஸ் பண்ண முடியல, அப்போதுதான் என் பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் என்னை ஊக்கப்படுத்தியது. ஒரே ஒரு பரீட்சை அவர்களுக்கு என் மீது இருக்கும் பாசமோ, நம்பிக்கையோ குறைந்துவிடாது என்று அவர்கள் எனக்கு உறுதியளித்தது. இது தான் என்னுடைய நீட் தேர்வில் வெற்றி பெற உதவியது
நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, பெரும் ரேங்க் இறக்கத்தால் நான் உடைந்து போனேன். அப்போதும் எனக்கு அரசு மருத்துவக் கல்லூரி கிடைக்கும் என்பதில் என் பெற்றோர் உறுதியாக இருந்தனர். அவர்கள் கூறியது எனக்கு நினைவிருக்கிறது, "நீ 200% கொடுத்திருக்கிறாய் என்பது எங்களுக்கு தெரியும், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்."
எனது பெற்றோரின் ஆதரவு இல்லாமல் முதல் முயற்சியிலேயே அரசு மருத்துவக் கல்லூரியில் சேருவது சாத்தியமில்லை என்று நான் நம்புகிறேன். அந்த 2 வருடங்களில் நான் செய்ததை விட அதிகமாக என் பெற்றோர்கள் தியாகம் செய்துள்ளனர். நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.
பெற்றோர்கள் எப்போதும் தங்கள் குழந்தை வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள், ஆனால், சிலர் உண்மையில் இல்லை. அதனால்தான், சில நீட் தேர்வாளர்கள் தங்கள் வாழ்க்கையில் கடினமான காலங்களை எதிர்கொண்டனர். NEET ஆர்வமுள்ள பெற்றோராக, அவர்கள் தவிர்க்க வேண்டும்:-
பிள்ளைகளின் படிப்புக்கு உதவுவது மட்டுமில்லாமல் அதிலுள்ள நிறைகளை பாராட்டுவதும், குறைகளை சரி செய்ய முயற்சி செய்வதும் பெற்றோரின் கடமை தான். அந்த வகையில், அவர்களின் பலவீனமானவற்றை பகுப்பாய்வு செய்வதில் நீங்கள் அவர்களுக்கு உதவலாம் மற்றும் அவர்களின் சந்தேகங்களை தீர்க்கலாம். பலவீனத்தௌ சரி செய்வதற்கான வழிகளை அவர்களுக்கு அடையாளம் காட்டுங்கள். தீர்க்க முடியாதது என்று ஒன்றும் இல்லை. சரியாக திட்டமிட்டு தொடர்ந்து முயர்சி செய்தால் கற்றுக் கொள்ள முடியும் என்பதை அவர்களே இயல்பாக தெரிந்து கொள்ள உதவும் டாஸ்க்குகளை கொடுக்கலாம்.
இன்றைக்கு இருக்கும் பதின்பருவத்தினருக்கு அதிகமான டைவெர்ஷன் இருக்கு. அவர்களை எளிதாக திசைத்திருப்பும் பதின்பருவ மாற்றங்கள், ஆன்லைன் வீடியோ கேம்ஸ், சமூக வலைதளங்கள், டிக் டாக் மாதிரியான ஆப்ஸ் என வரிசைக்கட்டி நிற்கிறது. இதற்கு நடுவில் தான் பிள்ளைகள் தங்களுடைய இலக்கை அடைய முயற்சி செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோரின் ஆதரவு மிக அவசியம். பெற்றோரின் கடமை என்னவென்றால், வேறு எந்த வெளிப்புற நபர்கள் அல்லது சமூக ஊடகங்கள் மூலமாகவோ திசைதிருப்பப்படாமல் இருக்க உதவ வேண்டும்.
பிள்ளைகளை திட்டியோ, குறை கூறியோ மாற்ற முடியாது. பெற்றோர்கள் ஒரு நண்பர்களை போல் பழகி பதின்பருவ பிள்ளைகளோட நெருக்கத்தை அதிகரிப்பதன் மூலம் அவர்களை வழிநடத்தலாம்.
தங்கள் குழந்தைக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அழுத்தம் மன அழுத்தத்தை மட்டுமே தருகிறதே தவிர வெற்றியை இல்லை. மற்ற டாப்பர்களுடன் ஒப்பிடும் போது மாணவர்கள் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று உணர்கிறார்கள். அதுவே அவர்களின் தன்னம்பிக்கையை குறைக்கிறது. பெற்றோர்கள், தங்களால் இந்த இலக்கை அடைய முடியவில்லை அதனால் நீ அடைந்தே தீர வேண்டும் என்பதும் அழுத்தமாக மாறிவிடும்.
ஒவ்வொரு பிள்ளைகளும் அவர்களின் திறன்களும் வித்தியாசமானது. உங்கள் பிள்ளைக்கு ஒரு வரம்பு உள்ளது மற்றும் அவருடைய/அவளுடைய திறனுக்கு ஏற்ப மட்டுமே செயல்பட முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். வரம்புகளை ஏற்கவும். உங்கள் பிள்ளையின் தனிப்பட்ட திறன்களை நீங்கள் நம்ப வேண்டும் மற்றும் அந்த விஷயங்களில் யதார்த்தமான எதிர்பார்ப்புகளை அமைக்க வேண்டும்.
தேர்வுக்காக இருந்தாலும் சரி அல்லது நீங்கள் வழங்கிய பணியை அவர்கள் முடித்திருந்தால், அவர்களுக்கு வெகுமதி அளிக்கவும். பாராட்டவும். அதே போல் அவர்களின் படிப்பில் மதிப்பெண் குறைந்தாலும் தாழ்த்தி விடாமல் ஆதரிக்கவும். பரீட்சையின் போது அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஊக்கமும் நம்பிக்கையும் தான் அவர்கள் மீள உதவும்.
இன்றைக்கு இருக்கும் இந்த போட்டி உலகில் பிள்ளைகளுக்கு தேவைப்படுவது "நீங்கள் எப்போதும் அவர்களுடன் இருக்கிறீர்கள்" என்ற வார்த்தை தான். அவர்களிடம் இதை அடிக்கடி சொல்லுங்கள்.
எங்கள் பிள்ளைக்கு இது வரும், இது வரவே வராது. இதை செய்யவே முடியாது என்று முத்திரைக் குத்த வேண்டாம். ஒருவரின் புத்திசாலித்தனத்தை சதவிகிதத்தின் அடிப்படையில் கணக்கிட முடியாது, அதாவது ஒருவர் 99% மதிப்பெண் பெற்றால் அவர் புத்திசாலி மற்றும் யாராவது 70-80% அல்லது அதற்கும் குறைவாக மதிப்பெண் எடுத்தால் அவர்கள் எதிர்காலத்தில் தோல்வியடைவார்கள் என்ற மூட நம்பிக்கையை கைவிடவும்.
“எல்லோரும் மேதைகள். ஆனால் ஒரு மீனை மரத்தில் ஏறும் திறனை வைத்து மதிப்பிட்டால், அது தன் வாழ்நாள் முழுவதும் அதை முட்டாள் என்று நம்பி வாழும். உங்கள் குழந்தையின் பலத்தை கண்டுபிடித்து அந்த வழியில் அவர்களை ஊக்கப்படுத்தினால் எளிதாக வெற்றிப் பாதையில் செல்வார்கள்.
நீட் தேர்வுக்கு முயற்சி செய்யும் அனைத்துப் பெற்றோர்களுக்கு சொல்ல விரும்புவது நம்பிக்கை, ஊக்கம், பயிற்சி, அன்பு, அரவணைப்பு என பாஸிட்டிவ்வான அணுகுமுறையே அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து இலக்கை அடைய உதவுகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் கொடுக்கும் ஆதரவு அவர்கள் வாழ்நாள் முழுவதும் தங்களில் நன்றியுணர்வை காட்ட காத்திருக்கிறார்கள்.
இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மறக்காமல் உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள். எங்களுடைய பதிவுகளை சிறப்பாக்க உதவும்.
Be the first to support
Be the first to share
Comment (0)