பிறந்த குழந்தையை பற்றி தா ...
புதிய பெற்றோரான சோனம் கபூர் மற்றும் ஆனந்த் அஹுஜா ஆகியோருக்கு வாழ்த்துகள்!
ஆகஸ்ட் 20, 2022 அன்று, சோனம் கபூரும் ஆனந்த் அஹுஜாவும் தங்கள் முதல் குழந்தையை வரவேற்கும் ‘நல்ல செய்தி’யை அறிவித்தனர். புதிய பெற்றோர்கள் தாங்கள் ஒரு அழகான ஆண் குழந்தையை வரவேற்றதையும், அவர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதைப் பகிர்ந்து கொண்டதையும் வெளிப்படுத்தினர்.
எல்லா தாய்மார்களுக்குமே குழந்தை பிறந்த அந்த தருணம் சந்தோஷமும், வலியும் கலந்த ஒருவித இனிமையான அனுபவம். இவர்களின் வருகைக்காக காத்திருக்கும் அம்மாக்களுக்கு குழந்தையின் முகம் பார்த்தால் எல்லா வலிகளும் மறந்துவிடும். குழந்தையின் செய்கைகளும், அழுகையும் அப்போதே பல தேவைகளை உணர்த்த ஆரம்பித்துவிடும். அதனால் அம்மாக்களும் குழந்தையின் தேவைகளை பூர்த்தி செய்வதில் மூழ்கிவிடுவார்கள்.
ஆனால் முதல் குழந்தை பிறந்தவுடன் எல்லா அம்மாக்களுக்கு ஒருவித பயமும், பதற்றமும் இருப்பது இயல்பு தான். பச்சிளம் குழந்தைகளைப் பராமரிக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் உள்ளது முதல் சில நாட்களில் அவர்கள் தேவையான எல்லாவற்றையும் செய்வதற்கு ஆயத்தமாக இருப்பார்கள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல குழந்தை பராமரிப்பில் நிறைய சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்து கொண்டே இருக்கும். அதுவே அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களுக்கு ஒரு வித பயத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும். கவலைப்பட வேண்டாம் எல்லாவற்றுக்கும் தீர்வு இருக்கின்றது.
நடு இரவில் சில பெற்றோர்கள் திடீரென்று எழுந்து குழந்தை மூச்சு விடுகிறதா என்று பார்ப்பார்கள். நடு இரவில் மட்டுமில்லை, அவர்கள் குளிக்கும் போதோ அல்லது சமைக்கும் போதோ கூட அதனை பாதியிலேயே விட்டு விட்டு ஓடி வந்து குழந்தை மூச்சு விடுகிறா என்று பார்த்துக்கொண்டே இருப்பார்கள். குழந்தையின் நெஞ்சு மேலே போய் கீழே வந்தால் தான் அவர்களுக்கு உயிரே வரும். எல்லா பெற்றோருக்குமே ஆரம்ப கட்டத்தில் இந்த பயம் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் குழந்தைகள் நார்மலாக தான் இருப்பார்கள்.
பிறந்த குழந்தைகள் பொதுவாகவே பெரும்பாலான நேரம் தூங்கி கொண்டு தான் இருப்பார்கள். இதனால் பெற்றோருக்கு தங்கள் குழந்தைகள் சரியான அளவு உணவு உட்கொள்கிறார்களா என்ற கவலை இருந்து கொண்டே இருக்கும். குழந்தைகள் அதிக நேரம் தூங்குவது இயல்பு தான். இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை கண்டிப்பாக அவர்களை எழுப்பி பால் கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை பால் குடித்தாலே அது அவர்களுக்கு போதுமானது. குழந்தைகளை எழுப்பும் போது மெதுவாக அவர்களது பாதத்தை வருடி அவர்களை தொந்தரவு இல்லாமல் எழுப்பலாம். ஒரு சில குழந்தைகள் எழுப்பி பால் குடிக்கும் போதே திரும்பவும் தூங்கி விடுவார்கள். இது இயல்பு தான் இதற்காக கவலைப்பட வேண்டாம்.
குழந்தைகளுடைய மலம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இருக்கும். இது பெற்றோர்களை மிகவும் கவலையுறச் செய்யும். சில நேரங்களில் ஒவ்வொரு விதமான நாற்றமாக இருக்கும். குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்களோ அதே போல் மலம் கழிப்பதும், அதே போல் நாற்றம் வருவதும் இயல்பு தான். இதற்காக கவலைப்படத் தேவையில்லை. ஒரு சில வருடங்கள் வரை இது போல் தான் இருக்கும்.
குழந்தைகளின் வடிவ அழகு பிறந்த குழந்தைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருப்பார்கள். பிறந்தவுடன் குழந்தைகளின் தோல் சுருங்கி டிரையாக இருக்கும். இதனைக் கண்டு பயப்படத் தேவையில்லை எல்லா குழந்தைகளும் அப்படித் தான் இருப்பார்கள். ஒரு சில நாட்களுக்குப் பிறகு அது தானாகவே சரி ஆகிவிடும். அதே போல் தலை ஒவ்வொரு குழந்தைக்கும் விதவிதமாக இருக்கும். அது அவர்கள் கீழே படுக்கும் போது தானாகவே சரியான வடிவத்திற்கு வந்துவிடும். பிறந்தவுடன் குழந்தைகளின் கண் மாறு கண் போல் இருக்கும். ஆனால் ஒரு மாதத்திற்கு பிறகு அவர்கள் பார்க்க ஆரம்பிக்கும் போது அது சரியாகி விடும். அதற்காக கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
குழந்தையின் தூக்கம் பிறந்தவுடன் குழந்தைகள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 18 மணி நேரமாவது தூங்குவார்கள். இதனை கண்டு பெற்றோர்கள் பயப்பட தேவையில்லை. குழந்தை பிறந்த பிறகு அவர்களுடைய உறுப்புகள் வளர்ச்சியடையும். குழந்தைகளுடைய உறுப்புகளின் வளர்ச்சிக்கு இந்த தூக்கம் மிகவும் அவசியம். போகப் போக அந்த தூக்கம் குறைந்து சரியான நேரத்துக்கு தூங்க ஆரம்பித்து விடுவார்கள். குழந்தைகள் எல்லாவற்றையும் இயல்பாக தான் செய்யும். அதனால் அவற்றைக் கண்டு பெற்றோர்கள் பதற்றம் அடையவோ, கவலைப்படவோ தேவையில்லை. இயல்புக்கு மாறாக உங்களுக்கு குழந்தையின் ஆரோக்கியத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக உங்கள் குழந்தை நல மருத்துவரை அணுகலாம்.
உங்களுக்கு வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பரிந்துரைகளில் ஒன்று எங்கள் அடுத்த வலைப்பதிவை சிறந்ததாக்குகிறது, பின்னர் கருத்துத் தெரிவிக்கவும், வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில் நீங்கள் திருப்தி அடைந்தால், நிச்சயமாக மற்ற பெற்றோருடன் பகிரவும்
Be the first to support
Be the first to share
Comment (0)