குழந்தைகளின் மூளை வளர்ச்ச ...
நகர்ப்புற மற்றும் வேலைப் பளு காரணமாக நம்ம குழந்தைகளுக்கான விளையாட்டாக மாறி இருக்கிறது தொலைக்காட்சி மற்றும் வீடியோ கேம் விளையாட்டுகள். கொஞ்சம் யோசிச்சு பாருங்க நம்மளோட குழந்தை பருவம் எப்படி இருந்ததுன்னு. நம்ம வெளிப்புற விளையாட்டுகளையே அதிகமா விளையாடினோம். அதனால நம்மளோட குழந்தை பருவம் ரொம்ப மகிழ்ச்சியானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தது.
இப்போ இருக்கிற குழந்தைகள் ஒரு வயசு ஆவதற்கு முன்னாடியே நடக்க ஆரம்பிச்சுடறாங்க. அதுனால நம்ம மூணு சக்ரா வண்டி ஓட்ட பழக்கலாம். உங்கள் குழந்தைகளுடன் விளையாட 5 தனிப்பட்ட வெளிப்புற விளையாட்டுகள் இங்கே.
#1. மணல் சார்ந்த விளையாட்டுகள் ரொம்ப நல்லது
மணலில் குழந்தைகள் ஏகப்பட்ட விளையாட்டுகளை அவர்களே உருவாக்குவார்கள். சொப்பு சாமான்களை மட்டும் கொடுத்துப்பாருங்கள். நமக்கு கமகமக்கும் சமையல் செய்து எடுத்து வந்துவிடுவார்கள். மணல் விளையாட்டு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லதே. விளையாடின பிறகு சுத்தமா கழுவிட்டா அரிப்போ அல்லது புண் எதுவும் வராது.
தோட்டத்தில் செடிகளோடு, வண்ணத்துப்பூச்சிகளோடு, மண்ணோடு, தண்னீரோடு என இயற்கையோடு விளையாட விடலாம். குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவு உணர்வார்கள். வெளிப்புற விளையாட்டில் குழந்தைகள் விரும்பு விளையாடுவதில் பந்தை முக்கியமாக சொல்லலாம். அதிலும் அப்பா அம்மாவோடு விளையாடினால் குழந்தைகள் எவ்வளவு நேரம் ஆனாலும் விளையாடிக் கொண்டே இருப்பார்கள். குழந்தைகள் பந்தை கொண்டு புதுப்புது விளையாட்டுகளை அவர்களே உருவாக்கும் திறன் கொண்டவர்கள்.
#2. ஓடிப்பிடித்து விளையாடுவது, கண்ணைக்கட்டிக் கொண்டு விளையாடுவது இதெல்லாம் குழந்தைகளின் விளையாட்டுப் பட்டியலில் எப்போதும் முக்கிய இடம் பிடித்திருக்கும்
கண்ணாம்பூச்சி. இந்த விளையாட்டு பிடிக்காத குழந்தைகளே கிடையாது. பெரியவர்களின் மேற்பார்வையில் விளையாடுவது நல்லது.
#3. தண்ணீரோடு விளையாடுவது என்பது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. குழந்தைக்கு ஏற்ற வகையில் தண்ணீரில் விளையாடும் விளையாட்டுகளை உருவாக்கிக் கொடுக்கலாம்.
#4. கட்டுமான விளையாட்டு வீட்டுக்குள்ள இந்த விளையாட்டை விளையாட்றத விட வீட்டுக்கு வெளிய பெரிய கல் அல்லது பெரிய ப்ளாக்ஸ் (blocks) வெச்சு விளையாட பழக்குங்க.
நொண்டி. நம்மளோட பாரம்பரிய விளையாட்டு. மூன்று வயது குழந்தைகளுக்கு கால்களை வலுப்படுத்த மற்றும் உடல் சம நிலையை பழக சிறந்த விளையாட்டா இருக்கும்.
#5. வண்ணங்களை கண்டுபிடித்தல் - ஒரு வயது முதல் மூன்று வயது குழந்தைகளுக்கு வண்ணங்கள் மீது ஆர்வம் அதிகமா இருக்கும். அவர்களுடன் வெளியே விளையாடும் பொழுது வண்ணங்களை சொல்லி அதை கண்டு பிடிக்குமாறு சொல்லலாம்.
குழந்தைகளை பொறுத்தவரையில் அவர்கள் கையில் இருக்கும் எந்த பொருளாக இருந்தாலும் அதை வைத்து வெளிச்சூழலில் எப்படி விளையாட வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். அந்த அளவிற்கு விளையாட்டு என்பது எப்போதும் அவர்களின் செயல்பாடுகளோடு இணைந்தது. நாம் வெளிச்சூழலில் விட்டால் மட்டும் போதும் மீதியை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள்.
குழந்தைகள் விளையாட்டும் விளையாட்டுகள் எதுவா இருந்தாலும் அந்த விளையாட்டை எப்படி வெளிப்புற விளையாட்டாக மாற்றலாம்னு யோசிங்க. காற்றும் மற்றும் மற்ற குழந்தைகள் கூட சேர்ந்து விளையாடும் விளையாட்டுகள் நிச்சயமா நம்ம குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் நல்லது.
வெளியில் விளையாடும் குழந்தைகள் நாள் முழுவதும் நல்ல புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்பதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம்.
Be the first to support
Be the first to share
Comment (0)