தமிழக பள்ளி மாணவிகள் 4 பே ...
கடந்த இரண்டு வாரங்களில் தமிழகத்தில் 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். 12-ஆம் வகுப்பு படிக்கும் மூன்று சிறுமிகளும், தற்போது சிவகாசியில் நேற்று 11ம் வகுப்பு மாணவி ஒருவர் வீட்டில் இறந்து கிடந்தார். இது தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதில் காரணங்களாக சொல்லப்படுபவை மதிப்பெண் குறைந்ததால் ஆசிரியர்கள் கொடுத்த அழுத்தம், ஐ ஏ எஸ் கனவை நிறைவேற்றமுடியவில்லை மற்றும் வயிற்று வலி. இதில் மூன்று மாணவிகள் பள்ளி விடுதியில் தங்கிப் படிப்பவர்கள். இந்த தொடர்ச்சியான சம்பவங்களால் பெற்றோர்கள் மிகுந்த பதட்டத்தில் உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் தங்கள் கைகளால் உயிரை மாய்த்துக் கொள்ளும் லட்சக்கணக்கானவர்கள் பற்றிய சில அதிர்ச்சியூட்டும் உண்மைகள் இதோ (ஆதாரம்: WHO)
இந்திய இளைஞர்களின் தற்கொலைக்கான காரணங்களையும் உந்துதலையும் இதுவரை யாராலும் அறிவியல் பூர்வமாக ஆராய்வதற்கான முயற்சிகள் குறைவாகவே உள்ளன.
எனவே, இந்த தீவிர தற்கொலை நடவடிக்கைக்கு உளவியலாளர்கள் முன்வைக்கும் காரணங்கள் என்ன? இன்றைய இளைஞர்கள் சமூக வலைதளங்கள், விளம்பரங்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி போன்றவற்றின் மூலம் பார்க்கும் செய்திகளால் தங்கள் தோற்றம் குறித்து மன அழுத்தம் ஆகிறார்கள். கற்பனை உலகத்தில் காணும் மகிழ்ச்சி, யதார்த்தத்தை எதிர்கொள்ளும் போது தோல்வி மற்றும் ஏமாற்றமாக மாறும். இந்த தோல்வியை சமாளிக்கும் திறன் இல்லையென்றால் பெரும்பாலும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கிறது. பெற்றோர்கள் மற்றும் சகாக்களிடமிருந்து சிறந்து விளங்குவதற்கான அழுத்தம் தற்கொலைக்கான மற்றொரு முக்கிய காரணமாகும், அதே நேரத்தில் கல்வி சிக்கல் மற்றும் உறவு சிக்கல்கள் டீன் கொரோஏஜ் தற்கொலைகளுக்கு முக்கிய காரணமாகும்.
ஏற்கனவே கொரோனாவின் தாக்கத்தினால் மன அழுத்தத்தில் இருக்கின்றது டீன் ஏன் பருவம். கல்வி ஒரு பெரிய சுமையாக மாறியிருக்கிறது, ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமுதாயம் கொடுக்கும் அழுத்தம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். குறிப்பாக, பள்ளி விடுதியில் படிக்கும் மாணவர்களுக்கு உளவியல் சிக்கல் அதிகம் வர வாய்ப்புகள் உண்டு.
பெற்றோரைப் பிரிந்து இருக்கின்றார்கள். மன கஷ்டத்தை யாரிடம் கூறுவது என்று தெரியாது, பெற்றோரிடம் கூறினால், புரிந்து கொள்வதில்லை. பள்ளி விடுதியிலும் அதிக கண்டிப்பு, டீன் ஏன் பருவத்தில் ஏற்படும் உடல்/,மன மாற்றங்கள் என பல நெருக்கடியில் சிக்கி இருக்கிறார்கள் இன்றைய பதின் பருவம்.
பெரும்பாலும் பெற்றோர்கள் இந்த வயதில் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது நல்ல படிக்க வேண்டும், ஒழுக்கமாக இருக்க வேண்டும். இது தவறல்ல, ஆனால் உங்கள் பிள்ளைகள் மனதில் என்ன இருக்கிறது என்பதை எத்தனை பெற்றோர்கள் தெரிந்து கொள்கிறோம். இந்த வயதில் பிள்ளைகள் பார்க்க பெரியவர்களாக தெரியலாம், அவர்களின் பேச்சும்,நடத்தையும் கூட பெரியவர்கள் போல் தோற்றம் அளிக்கலாம். ஆனால் இன்னும் அவர்கள் சிறு பிள்ளைகள் தான், அன்பும், அரவனைப்பும், வழிகாட்டுதலும், ஆதரவும் பெற்றோரிடமிருந்து தேவை.
பதின்பருவம் வந்தாலே செல்லம் கொடுத்தால் கெட்டுப் போய்விடுவார்கள் என்ற வாதத்தை முதலில் நிறுத்தவும். சில வீடுகளில் தொட்டு பேசுவது கூட கிடையாது. இது முற்றிலும் மாற வேண்டும். அவர்கள் எப்போதும் நம் பிள்ளைகள் தான். கட்டியனைத்து முத்தமிடுவது ஒன்றும் குத்தமில்லை. அன்பையும், கண்டிப்பையும் சமநிலையாக செய்ய வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. எற்கனவே உடலியல்/உளவியல் மாற்றம், கல்வி, உறவு மற்றும் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகம் உள்ளது. இதை சரியாக கையாள தெரியாமல் திணருகிறார்கள். பெற்றோர் யாராவது ஒருவரிடமாவது எப்போதும் வெளிப்படையாக பேசும் வாய்ப்பு அவர்களுக்கு இருப்பது அவசியம். ஏன்னென்றால் ஆரம்ப அறிகுறிகள் மூலம் நாம் நம் பிள்ளைகளின் உயிரை காப்பாற்ற முடியும்.
இந்த நான்கு சிறுமிகளின் மரணத்தில் மூன்று சிறுமிகள் பள்ளி விடுதியில் தங்கிப் படிப்பவர்கள். பள்ளி விடுதியில் தங்கிப் படிக்க வைக்க பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வீட்டில் அவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளும், அன்பும், ஆதரவும் நிச்சயமாக விடுதியில் அவர்கள் எதிர்ப்பார்க்க முடியாது. உதாரணத்திற்கு, அவர்கள் ஒரு மனக்குழப்பத்தில் இருந்தாலோ, அல்லது மன அழுத்தத்தில் இருந்தாலோ நாம் எப்படி கண்டுபிடிப்பது? அல்லது அவர்கள் உங்களிடம் \ எப்படி வெளிப்படுத்துகிறார்கள்? மரணம் நிகழ்ந்த பிறகு இதுவா அதுவா என்று பொருள் தேடுவதால் இழந்த உயிரை திரும்ப பெற முடியாது. ஆனால் அவர்களின் மனச்சோர்வை முன்கூட்டியே அறிவதன் மூலம் பிள்ளைகளை நாம் சமதானப்படுத்த முடியும். அவர்கள் மனதில் உள்ள பிரச்சனைகளை அறிய முடியும்.
தற்கொலை என்பது ஒன்று இரண்டு நாளில் திட்டமிடுவதில்லை. ஏற்கனவே ஒரு பிரச்சனையில் அவர்கள் நீண்ட காலம் இருந்து, பல அறிகுறிகளை அவர்கள் காட்டியிருக்கலாம், அது நமக்கு பெரிதாக தெரியாமல் போயிருக்கலாம். இந்த பிரச்சனைக்கு தீர்வே கிடையாது, இந்த உலகத்தில் நமக்கு உடஹ்வி செய்ய யாரும் இல்லை என்ற எண்ணம் அதிகரித்து, ஒரு மனநிலையில் உயிரை மாய்த்துக் கொள்ள தயாராகிறார்கள்.
இன்னொரு விஷயம், விடுதியில் தங்கிப் படிக்கும் பிள்ளைகளின் அறிகுறிகளை நீங்கள் கண்டுபிடிப்பது மிக கடினம். எப்போதெல்லாம் உங்கள் பிள்ளைகளிடம் பேச வாய்ப்பு கிடைக்கிறதோ, படிப்பை மட்டும் விசாரிக்காமல், குரலில் மாற்றம் தெரிகிறதா, ஏதாவது மறைக்கிறார்களா? வருத்தமாக இருக்கிறார்களா? என்று கவனியுங்கள். உங்களுக்கு வித்தியாசம் தெரிந்தாலோ அல்லது வீட்டுக்கு வர வேண்டும் போல் இருக்கிறது என்று கூறினால், உடனே பிள்ளையை அழைத்து வந்து அவர்களை ஆதரவாக இருந்து கவனித்து அதன் பிறகு பள்ளிக்கு அனுப்புங்கள்.
இது அநேகமாக இந்த காரணிகளின் கலவையாகும். மனச்சோர்வு என்பது தற்கொலைக்கான ஒரு உன்னதமான முன் அறிகுறியாகும், பெற்றோர்களாகிய நாம் மனச்சோர்வின் ஆரம்ப அறிகுறிகளை கண்டுபிடிப்பது மூலம் தற்கொலை எண்ணத்தை தடுக்கலாம்.
கவனிக்க வேண்டிய முதல் விஷயம் வாய்மொழி குறிப்புகள். குழந்தை "நான் ஓடிவிடுவேன்" அல்லது "எல்லாவற்றையும் முடிக்க விரும்புகிறேன்" என்று சொன்னால் - தயவுசெய்து புறக்கணிக்காதீர்கள்.
எதிலும் பற்றில்லாத அறிகுறிகள் (எந்த விஷயத்திலும் பற்றில்லை, தனது பொருள், ஆசையில்லாமல் இருப்பது, பேசாமல் இருப்பது, செயலில் ஆர்வமின்மை, நண்பர்கள் பிடிக்கவில்லை)
சில குழந்தைகள் மனச்சோர்வின் உன்னதமான அறிகுறிகளை காட்டுவார்கள்- தனிமை, அதிகப்படியான சோகம், பசியின்மை, எடை அதிகரிப்பு அல்லது குறைதல், தூக்கக் கலக்கம்.
இருப்பினும், முதல் படி பேசுவது. இந்த நான்கு மாணவிகளுடன் யாராவது ஒருவர் அவர்களின் இடத்தில் இருந்து அந்த பிரச்சனையை என்ன என்று அறிந்து அந்த சிறுமிகளுடன் பேசியிருந்தால், இதை தடுத்திருக்கலாம். எல்லா பிரச்சனைகளுக்கும் பாலியல் கொடுமை மட்டுமே காரணிகள் இல்லை. பெண் குழந்தைகள் என்பதால் அதோடு மட்டும் தொடர்ப்படுத்தி பேசுவது அபத்தம்.
உண்மையிலேயே அந்த சிறுமிகளுக்கு வேறு என்ன மனப்பிரச்சனை இருந்திருக்கும் என்று பெற்றோரால் கூட அறிய முடியவில்லை. காரணம் பெற்றோர் பிள்ளைகல் உறவில் வெளிப்படைத்தன்மை குறைவாக உள்ளது. அதனால் முதல் படியே உங்கள் குழந்தைகளிடம் மாற்றம் தெரிந்தால், அது உங்களை பொறுத்தவரைக்கும் சின்னதாக தெரிந்தாலும், உடனே அவர்களை நேரே அழைத்து, உனக்கு என்ன பிரச்சனை, என்னிடம் சொல், பெற்றோர் உனக்கு நாங்கள் இருக்கிறோம், எந்த சூழலிலும் உனக்கு ஆதரவாக இருப்போம்’ இந்த மாதிரியான வார்த்தைகள் தான் முதலுதவி.
பல காரணங்களுக்காக நாங்கள் தண்டிக்கப்பட்டு வகுப்பிலிருந்து வெளியே அனுப்பப்பட்டோம், ஸ்கேலால் அடிக்கப்படுகிறோம் அல்லது வகுப்பறையில் பெஞ்சில் நிற்க சொன்னோம். பள்ளிகளி குறிப்பாக, டீன் ஏஜ் பிள்ளைகளின் ஒழுக்கத்தை சரி செய்வதற்காக கொடுக்கப்படும் தண்டனைகள் சில நேரத்தில் விபரீதத்தில் முடியும். பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனையை எதிர்கொள்ளும் மாணவர்களின் மனநிலை மரணத்தை நினைக்க அவர்களைத் தள்ளலாம்.
"மரணம்" என்றால் என்னவென்று கூட அவர்களுக்கு சரியாக புரிந்து கொள்ளாத வயது இது. பதின் பருவ உலகத்தை குற்றம் மட்டும் சொல்லாமல் புரிந்தும் கொள்ள வேண்டிய நேரம் இது. அவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிய வேண்டிய நேரம் இது. நாங்கள் பேச வேண்டிய நேரம் இது.
Be the first to support
Be the first to share
Comment (0)