1. 16 வயது செஸ் கிராண்ட் மாஸ ...

16 வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா – டிவியிலிருந்து திசைத்திருப்ப உதவிய செஸ்

All age groups

Radha Shri

2.7M பார்வை

3 years ago

16 வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா – டிவியிலிருந்து திசைத்திருப்ப உதவிய செஸ்
Identifying Child`s Interests
தனிப்பட்ட விளையாட்டுகள்
வாழ்க்கை திறன்கள்
Nurturing Child`s Interests
ஸ்கிரீன் டைம்

"எல்லாவற்றையும் விட செஸ் விளையாடுவதை விரும்புகிறேன். அதனால் தான் தோல்விகள் தடையில்லை, முடிவுகள் முக்கியமில்லை"

என்கிறார் சிறு வயதிலேயே லட்சியத்தை நிறைவேற்ற காத்திருந்த பிரக்ஞானந்தா

More Similar Blogs

    உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய சென்னையை சேர்ந்த 16 வயது செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா. செஸ் உலகில் பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின், பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் கமலஹாசன்,  பிரக்ஞானந்தாவின் ரோல் மாடல் விஸ்வனாத் ஆனந்த் என பல துறைகளிலும் உள்ள பிரபலங்கள் வாழ்த்திக் கொண்டு இருக்கின்றனர்.

     

    சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த - தான் பார்த்து வியந்த உலகின் சிறந்த #Chess ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது #GrandMaster @rpragchess-க்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும். pic.twitter.com/aLpDfV4uzB

    — M.K.Stalin (@mkstalin) February 22, 2022

     

    இவ்வளவு பெரிய சாதனைக்குப் பின் பிரக்ஞானந்தாவின் கடின உழைப்பும், தியாகங்களும், பெற்றோரின் மிகப் பெரிய ஆதரவும் பக்க பலமாக இருக்ந்திருக்கிறது. இந்த பிரம்மாண்ட சாதனையை படைத்ததை நினைத்து எப்படி உணரீங்க என்று கேட்டதற்கு, மிக எளிமையாய் இப்போதாவது நான் நன்றாக தூங்கப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறார் இந்த சாதனை இளைஞன்.

    இன்றைக்கு பதின்பருவத்தினருக்கு எத்தனையோ சவால்கள் உண்டு. குறிப்பாக, அவர்களை எளிதாக திசைத்திருப்பும் ஸ்மார்ட் போன்ஸ், வீடியோ கேம்ஸ். இந்த போட்டி நிறைந்த உலகத்தில் தான் ஒவ்வொரு பதின்பருவத்தினரும் தங்களின் அடையாளத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். அந்த வகையில் பிரக்ஞானந்தாவின் வெற்றி பதின்பருவத்தினருக்கு ஒரு பெரிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது.

    பிரக்ஞானந்தாவின் குடும்பம்  

    சென்னையில் ஆகஸ்ட் 10, 2005 ஆம் ஆண்டு அன்று பிறந்திருக்கிறார். நடுத்தர வர்க்கக் குடும்பத்தை சேர்ந்தவர். அவருடைய தந்தை ரமேஷ் பாபு போலியோவால் பாதிக்கப்பட்டவர், தாயார் நாகலட்சுமி. தந்தை ரமேஷ் கூட்டுறவு வங்கியில் பணியாற்றுகிறார். பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி. இவர் செஸ் பயிற்சி பெற்று 14 வயதுக்குக்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் ஏற்கனவே சாம்பியன் பட்டம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    சிறு வயதிலேயே பிரக்ஞானந்தாவுக்கு செஸ் மீது அதீத ஆர்வம்

    image

    பிரக்ஞானந்தாவுக்கு சிறு வயது முதலே செஸ் மீது அதிக ஆர்வம் உண்டு. தனது சகோதரி செஸ் விளையாடுவதை பார்த்த மூன்றரை வயதிலிருந்தே பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். தனது 7 வயதில் இவர் 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாமியன்ஷிப் பட்டத்தை வென்றார். இந்த வெற்றி பிரக்ஞானந்தாவுக்கு மிகப் பெரிய ஊக்கம் அளித்தது.

     

    What a wonderful feeling it must be for Pragg. All of 16, and to have beaten the experienced & decorated Magnus Carlsen, and that too while playing black, is magical!

    Best wishes on a long & successful chess career ahead. You’ve made India proud!

    வெற்றிப் பயணம் ஆரம்பமானது

    7 வயதில் உலக சாமியன்ஷிப் பட்டத்தை வென்றதோடு  10 வயதில் உலகிலேயே இளம் சர்வதேச செஸ் மாஸ்டர் என்ற பெருமையை பெற்றார். அவருடைய 12 வயதில் ரஷ்யாவின் செஸ் நட்சத்திரம் செர்ஜி கர்ஜாகினுக்குப் பிறகு இளைய கிராண்ட்மாஸ்டர் என்ற பட்டத்தை வென்றார். மேலும் இத்தாலியில் நடந்த கிரெடின் ஓபனில் இறுதிச் சுற்றுக்கு வந்த பிறகு இந்த சாதனையை எட்டிய இளைய இந்தியர் ஆவார். அடுத்து அவரது 14 வயதில்  18 வயதுக்கு குறைவானோர் பிரிவில் உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாம்பியனாக மகுடம் சூட்டிக் கொண்டு இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.

    இப்பொது உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து செஸ் உலகில் நம்பிக்கை நட்சத்திரமாக மீண்டும் ஜொலிக்கிறார் பிரக்ஞானந்தா.

     

    Welcome to the club & congrats Praggnanandhaa!! See u soon in chennai?

    — Viswanathan Anand (@vishy64theking) June 24, 2018

     

    பிரக்ஞானந்தாவின் பெற்றோர் இருவரும் குழந்தைகளை டிவி பார்ப்பதிலிருந்து திசைத்திருப்ப எடுத்த ஆயுதம் தான் செஸ்

    இன்று எல்லா பெற்றோரும் குழந்தைகளை டிவி/மொபைல் பார்ப்பதிலிருந்து எப்படி திசைத்திருப்புவது என்று யோசிப்பது போலவே அன்று பிரக்ஞானந்தாவின் சிறு வயதில் இவரது பெற்றோரும் யோசித்திருக்கிறார்கள். தங்களுடைய இரண்டு குழந்தைகளும் டிவி பார்ப்பதிலேயே நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதற்காக பெற்றோர்களான ஏ ரமேஷ்பாபு மற்றும் நாகலட்சுமியும்  முதலில் அக்கா வைஷாலிக்கு செஸ்ஸை அறிமுகப்படுத்தினார்கள்

    இந்த செஸ் விளையாட்டு விரைவிலேயே பிரக்ஞானந்தாவையும் கவர்ந்தது. போலியோவால் ரமேஷ்பாபுவால் வேகமாக இயங்க முடியாததால், அவரது மனைவி நாகலட்சுமி தான் எப்போதும் இரண்டு குழந்தைகளுடன் போட்டிகளுக்கு செல்வார். நிச்சயமாக, பிரக்ஞானந்தாவின் குடும்பத்திற்கு மிகப் பெரிய சவால் தான். குறிப்பாக அவர்கள் ஒரே நிகழ்வுகளில் போட்டியிடும்போது எப்போதும் ஒரு நிம்மதியாக இருக்கும். ஏன்னென்றால்,  ஒரே விமானம், ஒரே ஹோட்டல் என்பதால் செலவுகளை குறைக்க முடியும்.

    இரண்டு பிள்ளைகளோடும் செஸ் பயணம் - அம்மாவின் விடா முயற்சி

    image

    பிரக்ஞானந்தா விளையாட தொடங்கும் போது  அம்மா நாகலெஷ்மி ஏற்கனவே வைஷாலியுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அதனால் பெற்றோர்கள் இரு பிள்ளைகளின் செஸ் அட்டவணையையும் எப்படி சமாளிப்பது என்பதுதான் இவர்களின் மிகப் பெரிய சவாலாக இருந்தது.  ஆனால், செஸ் மீதான அவரது ஆர்வத்தை உணர்ந்து நாங்கள் விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்கிறார் தந்தை ரமேஷ்பாபு.

    சென்னை புறநகர்ப் பகுதியான பாடியில் வசிக்கும் ரமேஷ்பாபுவும் அவரது குடும்பத்தினரும் தங்கள் குழந்தைகளின் சதுரங்க போட்டிகளுக்கான தேதிகளை சுற்றியே அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் அமைத்துக் கொண்டனர்.

    லட்சியம் நிறைந்த பிரக்ஞானந்தா

    பிரக்ஞானந்தா மிகவும் தெளிவான லட்சியம் கொண்டவர், ஆனால் போட்டிகளில் ஏற்படும் பின்னடைவுகளால் எளிதில் துவண்டுப் போக மாட்டர் என்று அவரது பெற்றோர்கள் சொல்கிறார்கள்.  கடந்த ஆண்டு ஆகஸ்டில், அவர் 2500 செயல்திறன் மதிப்பீட்டைத் தொட்டார், ஆனால் HZ போட்டியில் தனது கடைசி-சுற்றுப் போட்டியில் தோல்வியடைந்ததால், அவரது முதல் GM விதிமுறையை தவறவிட்டார். சாண்ட்ஸ் ஓபன், ஐல் ஆஃப் மேன் இன்டர்நேஷனல் அல்லது சிகோரின் மெமோரியல் - தொடர்ந்து நடந்த போட்டிகளில் அவர் வெலல்வில்லை. ஆனால், "எல்லாவற்றையும் விட அவர் செஸ் விளையாடுவதை விரும்புவார். அதனால் தான்  முடிவுகள் அவருக்கு முக்கியமில்லை" என்று ரமேஷ்பாபு புன்னைகையுடன் பகிர்ந்து கொண்டார்

    பிரக்ஞானந்தாவின் தனித்துவத்தை கண்டறிந்த பயிற்சியாளர்

    image

    பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர் ரமேஷின் அகாடமியில் திறமையுள்ள,  ஆர்வமுள்ள  பல்வேறு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது சில நேரங்களில் சவாலாக இருக்கும். இதில் பிரக்ஞானந்தா சற்று வித்தியாசமானவர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவர் என்னிடம் வந்தபோது அவர் ஒரு சிறப்பான  குழந்தை என்று எனக்கு தெரியும். நான் பல திறமையான குழந்தைகளுடன் வேலை செய்கிறேன், ஆனால் அவர் எப்போதும் விதிவிலக்கானவர். அவர் ஒரு வீரராக தனது பலத்தை அறிந்தவர் மற்றும் மிகவும் கடினமாக உழைக்க தயாராக இருக்கிறார்.

    அடிக்கடி வெற்றி பெற உதவுவதில் கவனம் செலுத்துவதை விட, பயிற்சி பெறுபவர்களுக்கு தோல்விகளை சமாளிக்கவும், மீண்டு வந்து வலிமையுடன் திரும்பவும் உதவுவதே அவசியமாகும். உங்களால் முடிந்த கடின உழைப்பை காட்டி தோற்றுக்கொண்டே இருக்கலாம். தோல்வியின் மீது கவனத்தை செலுத்தாமல், நேர்மறையான அணுகுமுறை தான் தேவை. பிரக்ஞானந்தாவுக்கு அது இருக்கிறது.

    பிரக்ஞானந்தா மிகவும் யதார்த்தமானவர். எல்லா போட்டிகளிலும் வெல்ல முடியாது என்பது அவருக்கு தெரியும். அவர் தொடர்து போராட இந்த மனப்பான்மை அவருக்கு உதவியது. வாய்ப்புகளை அவர் இழந்தபோதும் உத்வேகத்துடன் இருந்தார். ஒருபோதும் அவர் தன்னை தாழ்வாகவோ, நம்பிக்கையற்றவராகவோ இருந்ததில்லை. இந்த பக்குவம் எல்லா குழந்தைகளுக்கும் அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது. இது அவருடைய பலம்.

    கிராண்ட் மாஸ்டர் பட்டத்திற்காக எடுத்த தீவிரமான பயிற்சி

    image

    பிரக்ஞானந்தாவுக்கு செஸ் விளையாட்டில் சிறப்பான பயிற்சி கொடுத்தவர்  மற்றும் செஸ் போட்டியின் நுணுக்கங்களை கற்றுத்தந்தவர் இந்திய செஸ் அணியின் பயிற்சியாளரும் கிராண்ட்மாஸ்டருமான ஆர்.பி ரமேஷ்.

    செஸ் விளையாட்டில் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் என்பது முனைவர் பட்டம் பெறுவது போன்றது. யங் இன்டர்நெஷனல் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் என்றால் மூன்று தொடர்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்வதற்கான தகுதியை அடைய வேண்டும்.

    பிரக்ஞானந்தா தன்னுடைய அடுத்த இலக்காக வைத்துக் கொண்டார்.  கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான தகுதியை அடைய சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி குறிப்பிட்ட ரேட்டிங் மற்றும் மூன்று வெவ்வேறு தொடர்களில் பட்டம் வென்று சான்றிதழ் பெற வேண்டும்.

    இதனை தொடர்ந்து கடந்த நவம்பரில் இத்தாலியில் நடந்த உலக ஜுனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான விதிகளை பூர்த்தி செய்து சான்றிதழ் வென்றார். இரண்டாவதாக ஏப்ரல் 2018-ல் ஹெர்க்லியோன் பிஷர் நினைவு கிராண்ட் மாஸ்டர் நார்ம் டோர்னமென்ட்டில் இறுதி ரவுண்ட் ராபின் போட்டியில் வென்றதன் மூலம் இரண்டாவது முறையாக கிராண்ட் மாஸ்டருக்கான தகுதியை பூர்த்தி செய்தார். மூன்றாவது முறையாக கிரெடின் ஓப்பனில் கிராண்ட் மாஸ்டருக்கான விதிகளை பூர்த்தி செய்துள்ளார். இதனால் பிரக்ஞானந்தா 2500க்கு மேல் ரேட்டிங்கும் வைத்துள்ளார்.இவரது கனவான கிராண்ட் மாஸ்டர் பட்டம் சாத்தியமாவதற்கு இது ஒரு முக்கிய காரணம்.

    5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரை வீழ்த்தினார்

    ஏர்திங்ஸ் மாஸ்டர் எனப்படும் செஸ் தொடர் ஆன்லைனில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் மொத்தம் 16 பேர் பங்கேற்றனர். இந்த போட்டியில் எட்டாவது சுற்றில் 16 வயதான பிரக்ஞானந்தா, உலகின் நெம்பர் 1 வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனுடன் போட்டியிட்டு அவரி வென்றார். இதன் மூலம் 16 வயதிலேயே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றதோடு 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரையும் தோற்கடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    உங்கள் குணநலனும், பக்குவமும், யதார்த்த மனப்பான்மையும், விடா முயற்சியும், செஸ் விளையாட்டின் மீதுள்ள காதலும் இன்னும் பல சாதனைகளை அடைய வழிவகுக்கும்... வாழ்த்துக்கள் பிரக்ஞானந்தா. 

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)

    Related Blogs & Vlogs