10 கர்ப்பிணிப் பெண்களுக்க ...
கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கும் சில இடர்பாடுகளில் உடைகள் விருப்பத்திற்கு ஏற்ப அணிய முடியாதே என்ற கவலையும் ஒன்று. இனி அந்த கவலை வேண்டாம். அது எப்படி சாத்தியம் ஆகும்? என்று வியப்பில் உங்கள் விழிகள் விரிகிறதா ? பெண்கள் நினைத்தால் எதுவும் சாத்தியமே.
இளம் பெண்களுக்கு பேறு காலம் பெருமகிழ்ச்சி தந்தாலும் உடைகள் விசயத்தில் பெரும் திண்டாட்டத்தையே தருகிறது. சாதாரண காலத்தில் விரும்பிய உடைகளில் வலம் வரும் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஒரே மாதிரியான தொள தொள உடைகளை அணிந்து நொந்து தான் போகிறார்கள். இதற்கு சங்கடப்பட்டு கொண்டே கர்ப்பிணிகள் வெளியே வராமல் வீட்டில் அடைந்து கிடக்கிறார்கள்.
வேலைக்கு செல்லும் கர்ப்பிணி பெண்களின் நிலை இதை விட மோசமாக உள்ளது. விரும்பிய உடைகளை அணியவும் முடியாமல், அசவுகரியமான தொள தொள உடைகளை அணியவும் மனமின்றி விழி பிதுங்கி நிற்கிறார்கள்.
வேலைக்கு செல்லும் பெண்கள் வித விதமான உடைகளில் செல்லவே விரும்புவார்கள்.
கர்ப்பிணி பெண்களும் பிற பெண்களை போல கர்ப்ப காலத்தில் நவ நாகரீக உடைகளை அணிந்து மகிழலாம். கர்ப்பிணி பெண்கள் எப்படி உடை அணிந்தால் எடுப்பாக தோன்றுவார்கள் என்று பார்க்கலாம்.
கர்ப்பிணி பெண்கள் பயணம் செய்யும் போது இது போன்ற உடைகளை அணிந்து கொள்ளலாம்.கடற்கரையில் நடந்து செல்லும் போதும், வெளியே உணவகங்களுக்கு செல்லும் போதும் இது போன்ற உடைகள் நவ நாகரீக தோற்றத்தை அளிக்கும்.இந்த உடையில் வித்தியாசமாக காட்சி அளிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் மேக்சிக்கு மேல் பகுதியில் சிறிய பெல்ட் அணிந்து கொள்ளலாம்.சுகமான பயணத்திற்கு ஏற்ற சூப்பரான உடை இது.
நாகரீக தோற்றத்தை அதிகம் விரும்பும் கர்ப்பிணிகள் இது போன்ற உடைகளை பயன்படுத்தி மகிழலாம். ஜம்ப் சூட்டுடன் டி சர்ட் அல்லது சாதாரண சட்டை அணிந்து கொள்ளலாம். இது போன்ற உடைகளால் கர்ப்பிணி பெண்கள் வித்தியாசமான அழகுடன் திகழ முடியும்.குண்டாக இருக்கும் கர்ப்பிணி பெண்கள் கருப்பு நிறத்திலான ஜம்ப் சூட் அணிந்தால் சற்றே ஒல்லியாக தெரிவார்கள். ஆனால்,கருப்பு நிற உடைகள் வெயிலுக்கு ஏற்றதல்ல.
பொதுவாக கர்ப்பிணி பெண்களுக்கு கவுன் மாடல் உடைகளே பொருத்தமாக இருக்கும். அந்த வகையில் மூட்டுக்கு கீழ் வரை நீளம் கொண்ட ஷிப்ட் டிரஸ்களும் பொருத்தமாக இருக்கும். இது போன்ற உடைகளில் அதிக வண்ணங்களும், வேலைப்பாடுகள் மிகுந்த உடைகளையும் தேர்ந்தெடுக்க வேண்டும். கழுத்து பகுதியில் அதிகம் அகலம் கொண்ட உடைகள் ("வி" வடிவில் கழுத்து பகுதி அமைந்த உடைகள் ) கர்ப்பிணி பெண்களுக்கு கண கச்சிதமாக பொருந்தும். ஷிபான் மெட்டீரியலில் தயாரான " ஒன் பீஸ் " உடை கர்ப்பிணிகளுக்கு பொருத்தமாக இருக்கும்.
இந்த வகை உடைகள் கர்ப்பிணி பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை வழங்கும். வேலைக்கு செல்லும் கர்ப்பிணி பெண்களுக்கான நேர்த்தியான உடை இது. இது போன்ற உடைகள் அணிந்து கொள்வதற்கு சவுகரியமாக இருக்கும். கர்ப்ப காலத்திலும், அதற்கு பின்னரும் இது போன்ற உடைகளை கர்ப்பிணிகள் தாராளமாக அணியலாம். இது போல டியூனிக் வகை உடைகளும் கர்ப்பிணி பெண்களுக்கு அழகான தோற்றத்தை அளிக்கும். இது போன்ற உடைகள் நாம் விரும்பும் சவுகரியத்தில் மாற்றம் செய்து அணிந்து கொள்ள கூடிய உடைகள் ஆகும்.
கர்ப்பிணி பெண்களுக்கு வித்தியாசமான தோற்றத்தை அளிப்பதில் இந்த வகை உடைகள் முன்னிலை வகிக்கின்றன. குறிப்பாக, கர்ப்பிணிகள் வயிற்றுக்கு மேல் ஸ்கர்ட் அணிந்தால் எடுப்பான தோற்றம் கிடைக்கும். வயிறு ஒவ்வொரு மாதமும் பெரிதாகுவதற்கு ஏற்றார் போல இந்த வகை உடைகளையும் பெரிதாக்கி அணிய முடியும். இந்த வசதி ஸ்கர்ட் உடைகளில் தான் உள்ளது. இதற்கு பொருத்தமாக டெனீம் ஜாக்கெட் அணிந்தால் நன்றாக இருக்கும்.
வழக்கமாக அணியும் ஜீன்ஸ்களை கர்ப்ப காலத்தில் அணிய முடியாது அதற்கு மாறாக கர்ப்பிணி பெண்கள் அணிய கூடிய ஜீன்ஸ்கள் உள்ளன.நெகிழக் கூடிய மெட்டீரியலை கொண்டு இது தயாரிக்கப்படுகிறது. அதனால் இது அணிந்து கொள்ள வசதியாக இருக்கும். ப்ளைன் டாப் இந்த ஜீன்ஸ் உடைகளுக்கு அணிந்து கொண்டால் வயிறு பெரியதாக தெரியாது.
சல்வா, குர்தா மற்றும் லாங் டாப்ஸ் உடைகளில் "சைட் கட்" இருந்தால் நேர்த்தியாக இருக்கும்.
இது மாதிரியான உடைகள் விலையும் குறைவு. காட்டன் உடைகள் வெயில் காலத்திற்கு ஏற்றவை.
பல ஷேடுகள் கொண்ட லெக்கிங்ஸ்களையும் கர்ப்பிணி பெண்கள் அணியலாம். இதற்கு பொருத்தமாக நீளமான டாப் மற்றும் டியூனிக் மாடல் மேலாடைகளையும் , குர்த்திகளையும் பயன்படுதபயன்படுத்தி கொள்ளலாம்.பேரலல் பேண்ட் மற்றும் லூஸ் பேண்ட் போன்றவைகளையும் கர்ப்பிணி பெண்கள் அணியலாம்.
#1. கர்ப்பிணி பெண்கள் மிக இறுக்கமான உடைகளை தவிர்ப்பது நல்லது
#2. டி சர்ட் போன்ற உடைகளை உடலை இறுக்கும் வண்ணம் அணிய வேண்டாம்.
#3. கர்ப்பிணிகள் வயிற்றை அழுத்தும் உடைகளை தவிர்ப்பது நல்லது.
கர்ப்பிணி பெண்கள் மேலே கூறப்பட்டுள்ளது போன்ற உடைகளை தேர்வு செய்து அணிந்தால் கர்ப்ப காலத்தில் உடைகள் தேர்வு செய்வது ஒரு சவாலாக இருக்காது.
Be the first to support
Be the first to share
Comment (0)