பருவகால மாற்றங்களைப் பற்ற ...
பருவ காலம் சூடாகவும் குளிராகவும் மாறி மாறி வருவதால், குழந்தைகள் மிகவும் எளிதாக மற்றும் அடிக்கடி நோய்வாய்ப்பட வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால் எப்போதும் மூக்கு ஒழுகுதல் மற்றும் தொண்டை வலிகள் போன்றவற்றால் குழந்தைகள் அவதிப்படுகிறார்கள்.
பருவகால மாற்றங்களைக் கையாள்வதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. டாக்டர் ஆனந்த ஆர். இன் கருத்துக்கள் இங்கே இணைக்கப் பட்டுள்ளன.
1) காய்ச்சல் தடுப்பூசியைக் கருத்தில் கொள்ளுங்கள் : காய்ச்சலால் மற்றும் உடல் நலக்குறைவால் உங்கள் பிள்ளைகள் சிரமப்பட்டால் காய்ச்சல் தடுப்பூசி போடுவதைப் பற்றி கருத்தில் கொள்ளுங்கள் . ஒவ்வொரு ஆண்டும், ஒரு புதிய இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி சந்தையில் வருகிறது, இது அந்த ஆண்டிற்கான வைரஸ் திரிபுக்கு உங்கள் உடம்பில் ஆன்டிபாடிகளை உருவாக்குவதற்காக மற்றும் இதன் பலன் ஒரு வருடம் நீடிக்கும். தடுப்பூசி செயல் பெற இரண்டு வாரங்கள் எடுக்கும், எனவே பருவகால ஒவ்வாமை தொடங்குவதற்கு சற்று முன்னதாகவே எடுத்துக் கொள்வது நல்லது. இதற்கு உங்கள் குழந்தை மருத்துவரை அணுகலாம்.
2) நெரிசலான, மூடப்பட்ட இடங்களைத் தவிர்க்கவும்: நோய்த்தொற்று உச்சத்தில் இருக்கும்போது, நெரிசலான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும், குறிப்பாக உங்கள் குழந்தை மிகச் சிறியவர்களாக இருந்தால், திரையரங்கு போன்ற மூடப்பட்ட இடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். மேலும், உங்கள் பிள்ளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், அது மற்ற குழந்தைகளுக்கும் பரவக் கூடும் என்பதால், காய்ச்சல் குறையும் வரை அவர்களை வெளியே அனுப்ப வேண்டாம்.
3) உங்கள் பிள்ளைக்கு எடுத்துச் சொல்லுங்கள்: 2 மற்றும் 3 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அடிப்படை வழிமுறைகளைப் புரிந்து கொள்ள முடியும். சளி அல்லது இருமல் உள்ள ஒருவருடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க சொல்லுங்கள், அடிக்கடி கைகளைக் கழுவவும், மூக்கு மற்றும் முகத்தை தொடுவதைத் தவிர்க்கவும், கைகளுக்கு சானிடைசர் பயன்படுத்தவும், மற்றும் மூக்குத் துடைக்க அல்லது இருமு ம் போது திசு காகிதத்தைப் பயன்படுத்தும்படி அறிவுறுத்துங்கள். நீங்கள் தான் அனைத்தையும் செய்வதில் முன்னிலை வகிக்க வேண்டும், ஆனால் அவர்கள் இறுதியில் கற்றுக்கொள்வார்கள்.
4) வைட்டமின் D மற்றும் C ஆகியவற்றை அதிகரிப்பது: வைட்டமின் D மற்றும் C நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று அறியப்படுகிறது. வைட்டமின் D-க்கு உணவு ஆதாரங்கள் குறைவாக இருப்பதால் நீங்கள் கூடுதல் மருந்து/மாத்திரைகளை எடுக்கத் தொடங்க வேண்டும். ஆனால் வைட்டமின் C-க்கு, உங்கள் பிள்ளைக்கு ஏராளமான சிட்ரஸ் பழங்களை சாப்பிட கொடுங்கள், மேலும் நெல்லிக்காய் அல்லது தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உலர்ந்த அம்லாவை ஒரே இரவில் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் குழந்தையை அந்த தண்ணீரை குடிக்கச் செய்யுங்கள். இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
5) சளி மற்றும் காய்ச்சல் மோசமான நோய் எதிர்ப்பு சக்தியைக் குறிப்பது அல்ல: நோய்வாய்ப்படுவது வளர்ந்து வருவதன் ஒரு பகுதியாகும், மேலும் ஒவ்வொரு குழந்தையும் வருடத்திற்கு 6-8 முறை நோய்வாய்ப்படும். எனவே, இதைப் பற்றி கவலை கொள்ளாதீர்கள்.
6) தூரத்தை கடைப் பிடிக்கவும்: நீங்கள் நோய்வாய்ப்பட்டு மற்றும் வீட்டில் ஒரு சிறிய குழந்தை இருந்தால், தூரத்தை கடைபிடிக்கவும். தனி அறையில் தூங்குங்கள், குழந்தையை அதிகமாக தூக்குவதை தவிர்க்கவும், அவர்களை தூக்குவதற்கு முன் உங்கள் கைகளை கழுவ வேண்டும்.
7) சுகாதாரத்தைப் பற்றி கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்: தொடர்பு மூலம் சளி மற்றும் காய்ச்சல் பரவுவதால், குளியலறையில் கை துண்டுகளைப் பகிர்வதால் குழந்தைக்கு வைரஸ் தொற்று ஏற்படக்கூடும். துண்டுகள், குறிப்பாக தலையணை உரைகள், இரவு உடைகள், கட்டில் உரைகள், போர்வைகள் ஆகியவற்றை சூடான நீரில் கழுவவும், குழந்தை குணமடையும் வரை தினமும் மாற்றவும். இது தூசிப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும், குளிர் வைரஸ் உண்மையிலேயே பிடிவாதமாக இருப்பதால், அது ஒரு உடலில் மட்டும் அல்லாமல் சில நாட்கள் வரை பொருட்களில் நீடிக்கும் என்பதால், குழந்தை காய்சலில் இருந்து மீண்ட பிறகு, பல் தேய்க்கும் பிரஷை மாற்றுங்கள். ஏனென்றால் அதில் இன்னும் வைரஸ் இருக்கக்கூடும்.
8) எளிமையான தீர்வுகள் சிறப்பாகச் செயல்படுகின்றன: உங்கள் பிள்ளை சுவாசப் பாதை ஒவ்வாமைக்கு ஆளாகி - இந்த பருவத்தில் பரவலாக இருப்பது, மற்றும் குளிர்ச்சியாக அதிகரிக்கும் நமைச்சலை உணர்ந்தால், சுவாசப் பாதையிலிருந்து அனைத்து ஒவ்வாமைகளையும் நீக்க ஒரு நீராவி உள்ளிழுத்தல் நன்றாக வேலை செய்கிறது. துகள்கள் ஏற்படுத்தும் தொல்லையில் இருந்து விடுபட பெரிய பிள்ளைகளுக்கு சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்தும் யோகா செய்ய கற்றுக்கொடுக்கலாம். அல்லது மூக்கை உப்பு நீரில் கழுவுதல் மற்றும் வாயை கொப்பளிக்க செய்ய வைக்கலாம்.
9) ஆண்டு முழுவதும் நல்ல நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்: நன்றாக சாப்பிடுவது, உங்கள் அறைகளை நன்றாக வெயில் படும்படி வைத்தல், சூடான நீரில் துணிகளைக் கழுவுதல், குழந்தைகளின் பொருட்களை சுத்தப்படுத்துதல், குளிர் காலத்தில் டிஷு பேப்பர்களை பயன்படுத்துதல் மற்றும் பொறுப்புடன் அவற்றை அப்புறப்படுத்துதல் போன்ற ஆரோக்கியமான நடைமுறைகளை கடைப்பிடிக்கவும்.
10) முன்கூட்டியே தயார் செய்யுங்கள்: உங்கள் பிள்ளை குறிப்பாக உணர்திறன் உடையவர்களாக இருந்தால், முன்கூட்டியே தயார் செய்யுங்கள். ஆண்டிஹிஸ்டமின்கள் மற்றும் நெபுலைசர்களை எளிதில் எடுக்கும்படி வைத்திருங்கள். மாசுபடும் நேரத்தில் அவர்களை வெளியில் அனுப்புவதைத் தவிர்க்கவும், அதற்கு பதிலாக அதிகாலையில் அவர்களை வெளியே அழைத்துச் செல்லுங்கள்.
பருவகால மாற்றங்கள் காரணமாக நீங்கள் நோய்வாய்ப்படுவதை முற்றிலுமாக தவிர்க்க முடியாவிட்டாலும், இந்த உதவிக்குறிப்புகள் தீவிரத்தை குறைத்து நோயை சிறப்பாக சமாளிக்க உதவும்
Be the first to support
Be the first to share
Comment (0)