1. 0-1 வயது குழந்தைகளுக்கான ...

0-1 வயது குழந்தைகளுக்கான மழைக்கால 10 பராமரிப்பு குறிப்புகள்

0 to 1 years

Parentune Support

2.2M பார்வை

2 years ago

0-1 வயது குழந்தைகளுக்கான மழைக்கால 10 பராமரிப்பு குறிப்புகள்
பருவ கால மாற்றம்
தினசரி உதவிக்குறிப்புகள்
டயப்பர் பராமரிப்பு

கடுமையான வெப்பத்தில் மழை ஒரு சிறந்த ஆறுதலாக இருக்கும்போது, ​​இந்த பருவத்தில் ஒரு குழந்தைக்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. ஈரப்பதம், பூச்சிகள், கொசுக்கள் மற்றும் பாக்டீரியாக்கள் மழைக்காலங்களில்  பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும், குறிப்பாக குழந்தைகளை சுத்தமாகவும் மற்றும் உலர்வாகவும் பார்த்துக் கொள்வதால் இதுபோன்ற பல நோய்களைத் தடுக்கலாம். மழைக்காலங்களில் குழந்தைகளுக்கு உட்புற மற்றும் வெளிப்புற முன்னெச்சரிக்கைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.

பருவமழை நேரத்தில் குழந்தை பராமரிப்பு குறிப்புகள்

More Similar Blogs

     மழைக்காலங்களில் குழந்தை பராமரிப்பு குறித்த 10 எளிய மற்றும் பயனுள்ள உதவிக்குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.

    உங்கள் குழந்தையை சுத்தமாக வைத்திருங்கள்

    உங்கள் குழந்தையை சுத்தமாகவும், உலர்வாகவும் வைத்திருப்பது முதல் மற்றும் முக்கிய அம்சமாகும். தினசரி குளியல் தேவையில்லை. அதற்கு பதிலாக சூடான தண்ணீரில்  துணியை  நனைத்து குழந்தையை துடைக்கலாம்.  இடங்கள்   குளிர்ச்சியாக  இருந்தாலும் குழந்தைக்கு நிறைய இடங்களில்  வியர்க்கக்கூடும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் நண்பகல் நேரத்தில் ஒரு சூடான குளியல் கொடுக்கலாம். குழந்தையின் மடிப்புகளிலும் மூட்டுகளிலும் ஈரப்பதமும் மற்றும் அரிப்பு இல்லாமலும் பார்த்துக் கொள்ளவும். 

    ஆடை

    வெப்பநிலை மாறிக் கொண்டே இருப்பதால், குழந்தைகளுக்கு அதற்கேற்ப ஆடை அணிய வேண்டும். மென்மையான பருத்தி  துணிகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். அதேபோல்  முழு  கை கால் சட்டைகளை அணிவதன் மூலம் குழந்தைகளை  சூடாக வைத்திருப்பது மட்டுமல்லாமல், பூச்சி / கொசு கடியிலிருந்து பாதுகாக்கும். அதிகப்படியான அழுத்தம் உங்கள் குழந்தைக்கு ஈரப்பதத்திற்கு வழிவகுக்கும். ஈரப்பதம் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது மற்றும் பாக்டீரியாக்களுக்கான  இனப்பெருக்கம் உருவாக வழிவகுக்கிறது. எனவே இந்த பருவத்தில் அடிக்கடி துணி  மாற்றங்கள் தேவைப்படுகின்றன.

    உடல் பாகங்கள் சுத்தம்

    ஒரு குழந்தையின் அனைத்து பாகங்களும் நன்கு சுத்தம் செய்யப்பட்டு உலர வேண்டும். டயப்பர்களைப் பயன்படுத்தினால், அடிக்கடி மாற்றங்கள் மற்றும் சுத்தம் செய்வதை உறுதிசெய்ய வேண்டும்.  அந்த பகுதிகளில் டால்கம் பவுடரைத் தவிர்க்கவும். வெப்பநிலை குறையும் போது அடிக்கடி சிறுநீர் கழித்தாலும், உங்கள் குழந்தைக்கு டயப்பரை பயன்படுத்தாமல்  முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்.

    வீட்டில் சமைத்த உணவை கொடுங்கள்

    குழந்தைகளுக்கு வீட்டில் சமைத்த உணவை கொடுங்கள்.  திடப்பொருள் உணவை  குழந்தைகளுக்கு கொடுக்கும்போது  நன்கு வேகவைத்து  சமைத்து கொடுக்க வேண்டும், பால் பவுடரை கலக்க , முதலில் தண்ணீரை கொதிக்கவைத்து  குளிர்விக்க வேண்டும்.

    சுகாதாரத்தை பராமரிக்கவும்

    தாய் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் தங்கள் சுகாதாரத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக வெளியில் இருந்து வரும்போது, குழந்தையை தூக்குவதற்கு  முன்பு கைகளை கழுவ வேண்டும். பிரதான கதவுக்கு வெளியே காலணிகளை கழற்றுவது  போன்ற சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். பருவமழை காலங்களில் நோய்கள் அதிகம் பரவுவதால்  நோய் தொற்றுகளிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்க உதவும். 

    சுத்தமான வீடு

    வீடுகள், குறிப்பாக தரை தளத்தில் மழையின் போது நிறைய அழுக்குகள் குவிகின்றன. உட்புறத்தில் ஈரமான காலணிகளைத் தவிர்ப்பதற்காக போர்டிகோவில் ஒரு ஷூ ரேக் வைக்க வேண்டும். குழந்தைகள் இருக்கும்  வீட்டில் மாடிகளை தினமும் இரண்டு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். வீட்டிலோ அல்லது வீட்டை சுற்றிலோ நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

    உடல் / அறை வெப்பநிலையை பராமரிக்கவும்

    பெரும்பாலான வீடுகளில் ஏர் கண்டிஷனர்கள் அவசியமாகிவிட்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவை வானிலைக்கு ஏற்ற பல்வேறு அமைப்பு விருப்பங்கள் மற்றும் முறைகளுடன் வருகின்றன. உங்கள் குழந்தைக்கு வசதியாக இருக்க அதற்கேற்ப வெப்பநிலையை அமைக்கவும். மழைக்காலத்தில் ஏசி எபப்டி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைக்கு ஏற்ற வெப்பநிலையை பின்பற்ற வேண்டும்.

    ஸ்ப்ரேக்கள் மற்றும் எண்ணெய்கள்

    இந்த வானிலையின் போது கொசுக்கள் பெருகுவதால், நீங்கள் வீட்டை விட்டு விலகி இருக்கும்போது அவ்வப்போது கிருமிநாசினிகள் தெளித்தல் செய்யப்படலாம். நீங்கள் வெளியில் இருக்கும்போது கொசு கடியிலிருந்து பாதுகாப்பாக இருக்க குழந்தையின் சருமத்திற்கு லேசான லாவெண்டர் எண்ணெயை தேய்க்கலாம். இவை  சிறந்தவை மற்றும் இயற்கையானவை

    கூட்டத்தைத் தவிர்க்கவும்

    உங்கள் குழந்தையை நெரிசலான இடங்களுக்கு அழைத்துச் செல்வது என்பது தொற்றுநோய்களுக்கான திறந்த அழைப்பாகும். மழைக்காலங்களில் தொற்று காற்றில் இருப்பதால், நெரிசலான இடங்களைத் தவிர்க்க வேண்டும்.

    சுய மருத்துவம் வேண்டாம்

    சுய மருந்துகள் அறிவுறுத்தப்படவில்லை என்றாலும், பெற்றோர்களாகிய நீங்கள் எப்போதுமே உங்கள் குழந்தை மருத்துவரிடம் அடிப்படை மருந்துகள் மற்றும் பொதுவான சளி, இருமல் மற்றும் காய்ச்சலுக்கான மருந்துகளை அவசர காலத்தில் எந்த அளவு கொடுக்கலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் மற்றும் அதை பற்றி பேசலாம்.

    எல்லாவற்றையும் நம்மால் தவிர்க்க முடியாது, ஆனால் ஒரு சிறிய முன்னெச்சரிக்கைகள்  மற்றும் கவனிப்பு மழைக்காலத்தில் உங்கள் குழந்தை நோய்வாய்ப்படும் வாய்ப்பைக் குறைக்கும். இது குறைந்தபட்சம் உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் மழை  பருவத்தை ரசிக்க வைக்கும். இந்த பருவமழையில் குழந்தைகளின் சுகாதார சரிபார்ப்பு பட்டியலைப் பின்பற்றி பயம்பெறுவீர்கல் என நம்புகிறேன்

    உங்களுக்கு வேறு ஏதேனும் குறிப்புகள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பரிந்துரைகளில் ஒன்று எங்கள் அடுத்த வலைப்பதிவை சிறந்ததாக்குகிறது, பின்னர் கருத்துத் தெரிவிக்கவும், வலைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில் நீங்கள் திருப்தி அடைந்தால், நிச்சயமாக மற்ற பெற்றோருடன் பகிரவும்

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)

    Related Blogs & Vlogs

    Reflections of A First Time Moms

    Reflections of A First Time Moms


    0 to 1 years
    |
    118.4K பார்வை
    Being a Mother- The sweet reality

    Being a Mother- The sweet reality


    0 to 1 years
    |
    2.9M பார்வை
    Being a Mother - The Delicate Balance

    Being a Mother - The Delicate Balance


    0 to 1 years
    |
    29.6K பார்வை
    Being a mother - My aspirations

    Being a mother - My aspirations


    0 to 1 years
    |
    3.9M பார்வை