குழந்தைகள் படுக்கையை நனைப ...
இரண்டு வயதிற்கு மேல் ஆகியும் படுக்கையில் சிறுநீர் கழிப்பது பெற்றோருக்கு சிரமமாக இருக்கலாம், ஆனால் படுக்கையில் சிறுநீர் கழிப்பது குழந்தைகளின் பொதுவான பிரச்சனை. இந்தப் பழக்கம் பல மாதங்கள் அல்லது வருடங்கள் வரை கூட நீடிக்கக்கூடும்.
குழந்தைகள் பல காரணங்களுக்காக படுக்கையை நனைக்கிறார்கள் - மிகவும் பொதுவான சில இங்கே:
ஏறக்குறைய 15 சதவீத குழந்தைகள் 5 வயதில் படுக்கையை நனைக்கிறார்கள். அந்த எண்ணிக்கை 14 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளில் 1-2 சதவீதத்தினருக்கு மட்டுமே வயதுக்கு ஏற்ப குறைகிறது. படுக்கையை நனைக்கும் சிறுமிகளை விட சிறுவர்கள் இருமடங்கு வாய்ப்புகள் அதிகம். இதில் இன்னொரு வகை வளர்ச்சி தாமதங்கள், உணர்ச்சி மற்றும் நடத்தை சிக்கல்கள் உள்ள குழந்தைகளில் இது அடிக்கடி நிகழ்கிறது.
பயம் காட்டி, ஆக்ரோஷ்மாக உங்கள் பிள்ளையை தண்டிக்காதீர்கள், இது மன அழுத்தத்தையும், அவமான உணர்வையும் அதிகரிக்கும், மேலும் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை மறைக்க குழந்தைகளுக்கு கற்பிக்கலாம். அதற்குப் பதிலாக, உங்கள் பிள்ளையால் முடிந்தவரை சுத்தம் செய்ய உதவுங்கள்.
இரவுகளில் குழந்தைகள் படுக்கையை நனைக்கவில்லை என்றால் குழந்தைகளை ஊக்குவிக்கவும் வெகுமதி அளிக்கவும் உதவியாக இருக்கும்.
உங்கள் பிள்ளை படுக்கையில் சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்தி கொண்டால் ஈரம் செய்யாமல் இருந்த இரவுகளுக்கு இரண்டு ஸ்டிக்கர் பரிசுகளை கொடுக்கலாம், ஒன்று ஈரமான இரவைப் பற்றி உண்மையை சொல்வதற்கு அல்லது அதை மறைக்கவோ அல்லது பொய் சொல்லவோ வேண்டாம் என்பதற்காக கொடுங்கள்.
இதை எல்லாம் முயற்சி செய்து பாருங்கள். கண்டிப்பாக இரவில் படுக்கையை நனைப்பது தானாக குறைந்து விடும்.
Be the first to support
Be the first to share
Comment (0)