உங்கள் குழந்தையின் முதல் ...
குழந்தையின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது எப்போதுமே அம்மாக்களுக்கு ஸ்பெஷல். குழந்தை பிறந்த நாளிலிருந்து எப்படியெல்லாம் கொண்டாடணும்னு நம்ம யோசிக்க ஆரம்பிச்சுடுவோம். நமக்கு ஒரு லிஸ்டே இருக்கும். ஆனா நம்ம குழந்தை இந்த கொண்டாட்டங்களை ரசிக்குமான்னு கேட்டா பெரியவங்க நம்ம யோசிக்கிற அளவுக்கு இல்லாவிட்டாலும் அவங்களோடு நினைவுகள்ல இது மகிழ்ச்சியான நிகழ்வா பதியும். ஆடம்பரத்தை விட அன்பும், அரவணைப்புமே அவங்க அதிகமா உணர்வாங்க.
நான் என் குழந்தையின் முதல் பிறந்த நாளை மிக எளிமையாக என் குடும்பதோடு மட்டுமே கொண்டாடினேன். அதற்கும் சேர்த்து இரண்டாவது பிறந்தநாளை சிறப்பாக என் குழந்தை ரசிக்கும் படியாக கொண்டாடினோம்.
முதல் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட விரும்பும் பெற்றோருக்கான சில குறிப்புகளை இப்போ பார்க்கலாம். கவனமாக படிக்க
இந்த விஷயத்தில் அப்பாக்களை எதிர்பார்த்து கொண்டே இருக்காமல், அம்மாக்கள் நாமே திட்டமிட வேண்டும். ஆடை, அலங்காரம், சாப்பாடு, இடம், எவ்வளவு பேர் வரப்போறாங்க, அழைப்பிதழ், ரிட்டன் கிஃப்ட் இப்படி உங்கள் குழந்தையின் பிறந்த நாளுக்கு என்னவெல்லாம் செய்யப் போகிறீர்கள் என்பதை முன்னதாக திட்டமிடுவதன் மூலம் கடைசி நேர டென்ஷனை தவிர்க்கலாம். குழந்தையையும் பார்த்து கொள்வதால் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். நாட்கல் சீக்கிரமே ஓடிவிடும். நிதானமாக திட்டமிட்டால் பணம் விரயம் ஆகாது, அந்த நாளும் நம் குடும்பத்துக்கு மறக்க முடியாத இனிமையான நாளாக அமையும்.
இதெல்லாம் நான் என் குழந்தையின் பிறந்தநாளில் செஞ்சது. உங்களுக்கு உதவும்னு நம்பறேன்.
Be the first to support
Be the first to share
Comment (0)