குழந்தைகளுக்கு வைட்டமின் ...
இன்று மக்கள் சூரிய ஒளி படாமல் வீட்டுக்குள் அல்லது அலுவலகத்துக்குள் முடங்கி விடுவது அதிகரித்து வருகிறது. பள்ளிகளிலும் பிள்ளைகள் திறந்த வெளியில் விளையாடுவது குறைந்துவருகிறது. அப்படி வெளியில் செல்பவர்களும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாத்து கொள்ள சன்ஸ்க்ரீன் லோஷன்களை பயன்படுத்திவருகிறார்கள்.
நமது உடலுக்குத் தேவையான சத்துக்கள் உடலில் குறையும்போது அதற்கான அறிவுகுறிகளை உடல் வெளிப்படுத்துகிறது. அதனைப் புரிந்துகொண்டு அதற்கான மாற்றங்கள் செய்து கொள்வதால் அந்த குறைபாடு மறைந்து உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. அப்படி நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்று தான் வைட்டமின் குறைபாடு பிரச்சினைகள். குறிப்பாக வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகின்ற பொழுது என்னென்ன மாதிரியான பிரச்சினைகள் நம் உடலில் ஏற்படுகின்றன என்று இந்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.
வளரும் குழந்தைகளின் வளர்ச்சியில் எலும்புக்கும் கணிசமான பங்கு உண்டு. ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் தசைகள் உருவாவதற்கு வைட்டமின் டி அவசியம் தேவை. இந்த வைட்டமின் பற்றாக்குறை ஆகும் போது குழந்தை ரிக்கட்ஸ் என்னும் நோய் பாதிப்புக்கு உள்ளாகலாம்.
வைட்டமின் டி சத்து குறைபாடு , உடலில் பல்வேறு ஆரோக்கிய சீர்கேடுகளை உருவாக்கலாம். உங்கள் உடலுக்கு போதுமான அளவு வைட்டமின் டி சத்து கிடைக்காமல் இருந்தால் உடல் அதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும். இவற்றைக் கருத்தில் கொண்டு அந்த குறைபாடுகளை களைவதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியும்.
வைட்டமின் டி சத்து சரியாக இருக்கும் போதும் நோய் தாக்குதல் இருந்தாலும் அது குணமாகி விடும். நம்முடைய உடம்பில் உள்ள தோல், கல்லீரல், சிறுநீரகத்தில்தான் வைட்டமின் டி உற்பத்தியாகிறது. தினசரியும் நம்முடைய உடம்பில் வெயில் படும் அளவிற்கு வேலை செய்தாலோ சத்தான உணவுகளை சாப்பிட்டாலோ வைட்டமின் டி சத்து உடம்பில் அதிகரிக்கும்.
வைட்டமின் டி சத்து சூரிய ஒளியில் அதிகம் உள்ளது என்பது பலரும் அறிந்த ஒரு செய்தியாகும். ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு இந்த வைட்டமின் டி சத்து மிகவும் அத்தியாவசியமாகும். வைட்டமின் டி சத்து எலும்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பதை பலரும் அறிவோம் . இது மட்டுமில்லாமல் ஃப்ளு போன்ற பாதிப்புகளைக் குறைக்கும் ஆற்றல் வைட்டமின் டி சத்துக்கு உண்டு.
வைட்டமின் டி இயற்கையாகவே பல உணவுகளில் இல்லை; இருப்பினும், எண்ணெய் மீன் மற்றும் குறிப்பாக காட் கல்லீரல் எண்ணெய் வைட்டமின் டி நிறைந்திருக்கும்.
வைட்டமின் நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
Be the first to support
Be the first to share
Comment (0)