1. கர்ப்ப காலத்தில் ஏற்படும் ...

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கான தீர்வு

Pregnancy

Radha Shri

3.3M பார்வை

3 years ago

கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கான தீர்வு

பொதுவாக கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் வருவது சாதரணம் தான். உடலில் நடக்கும் ஹார்மோன் மாற்றங்களால் கர்ப்பிணிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதில் இந்த மலச்சிக்கலும் ஒன்று. 50% கர்ப்பிணிகள் இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். எந்தெந்த வகையில் கர்ப்ப கால மலச்சிக்கலை சரி செய்ய முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கர்ப்ப காலத்தில் உணவுப்பாதை தசைகள் உட்பட உடல் முழுவதும் உள்ள தசைகள் தளர்வடையும்.. இதற்கு புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன் அதிகரிப்பதே காரணம். மேலும் கருவில் உள்ள குழந்தைக்கு கிடைக்க வேண்டிய சத்துக்களுக்காக கர்ப்பிணிகள் உட்கொள்ளும் இரும்புச்சத்து, வைட்டமின் மாத்திரைகளும் கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது. (கர்ப்ப காலத்தில் சத்து குறைபாடு பிரச்சனையை எப்படி கையாள்வது? - http://www.parentune.com/parent-blog/karppa-klattil-cattu-kuaipu-cikkal-eppai-kaiyvatu/4963)

More Similar Blogs

    மலச்சிக்கல் ஏற்படுவதற்கான முக்கிய நான்கு காரணங்கள்:

    கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவதற்கான மூன்று முக்கிய காரணங்கள் இங்கே உள்ளன, குறிப்பாக நீங்கள் ஆரம்பகால கர்ப்பத்தில் மலச்சிக்கல் இருந்தால்.

    1. கர்ப்ப கால கவலை, பதட்டம், குறைவான உடல் உழைப்பு, குறைந்த நார்ச்சத்து உணவு போன்றவை உடலின் அனைத்து அசௌகரியங்களுக்கும்  காரணம். இது உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் குடல் தசைகளை தளர்த்தி, குடலில் கருப்பை விரிவடையும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
    2. கர்ப்ப காலத்தில் மலச்சிக்கலுக்கு மற்றொரு காரணம் கர்ப்ப காலத்தில் இந்தப் பிரச்சனை அதிகரிப்பது ஆகும், இது குடல் உட்பட உடல் தசைகளை தளர்த்துகிறது, இதனால் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன் மெதுவாக செரிமானம் மற்றும் மலச்சிக்கல் ஏற்படுகிறது
    3. கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நீரிழப்பு மற்றொரு காரணம். உங்கள் உடல் தண்ணீரை வேகமாக இழக்கும்போது நீரிழப்பு ஏற்படுகிறது. எனவே கர்ப்ப காலத்தில் நிறைய திரவங்கள் மற்றும் தண்ணீர் குடிப்பது நல்லது
    4. இரும்புச் சத்து மாத்திரைகள் சில பெண்களுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தலாம் அல்லது இல்லாமல் போகலாம், எனவே அதைக் கவனத்தில் கொள்ளுங்கள். நீங்கள் இரும்புச் சத்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு, மலச்சிக்கலாக இருந்தால், அதைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் விவாதிக்க விரும்பலாம். சில பெண்களில், இது தளர்வான இயக்கங்களை ஏற்படுத்தும்

    மலச்சிக்கலை ஏற்படுத்தும் மருந்து மாத்திரைகள்

    இப்போதெல்லாம் கர்ப்பிணி பெண்கள் சர்க்கரை நோயாளி போல் கை நிறைய மாத்திரைகளோடு தான் இருக்கிறார்கள். இந்த வைட்டமின்கள், இரும்புச்சத்து மாத்திரைகளும் மலச்சிக்கலை தீவிரப்படுத்தும். தொடர்ந்து மலச்சிக்கலை சந்தித்தீர்கள் என்றால் உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் இதை பற்றி கலந்து ஆலோசியுங்கள். மலச்சிக்கலை தீவிரப்படுத்தாத மாத்திரைகளை பரிந்துரைக்க சொல்லுங்கள்.

    மருத்துவர் பரிந்துரைக்காத மலச்சிக்கலை தடுக்கும் மாத்திரைகள் மற்றும் எண்ணெய்களை உட்கொள்ளாதீர்கள். குழந்தையை பாதிக்காத பாதுகாப்பான மருத்துவ முறைகள் மற்றும் வீட்டு வைத்தியம் போன்றவற்றை பின்பற்றுவதற்கு முன்னால் உங்கள் மருத்துவரிடம் பேசுவது நல்லது.

    இந்த கர்ப்ப காலம் முழுவதும் கர்ப்பிணிகள் உட்கொள்ளும் ஒவ்வொன்றும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். உடல், உணவுகள், வாழ்க்கைமுறை என அனைத்திலும் கவனம் அவசியம். எளிதாக குணப்படுத்தகூடிய மலச்சிக்கலை மேலும் சிக்கலாக்கி கொள்வது நம்முடைய உணவுப்பழக்கமும், வாழ்க்கைமுறையும் தான். இந்த இரண்டையும் ஆரோக்கியாமாக வைத்துக் கொண்டால் மலச்சிக்கல் மட்டுமின்றி மற்ற வயிற்றுக் கோளாறுகளிலிருந்தும் எளிதாக உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    மலச்சிக்கலை சரிசெய்வதற்கான தீர்வு

    கர்ப்ப நேர மலச்சிக்கலில் இருந்து விடுபடுவதற்கான தீர்வுகள் அல்லது ஆலோசனைகள் இங்கே. 

    • ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மூலமாக இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும்.
    • கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தினமும் 25 முதல் 30 கிராம் நார்ச்சத்து தேவைப்படுகின்றது. இந்த வகை சத்துக்களை எடுத்துக் கொள்ளும் போது குறைந்த அளவில் தொடங்க வேண்டும். ஒவ்வொரு உடம்பிற்கும் வெவ்வேறு விதமான மாற்றங்கள் உண்டாகும் என்பதால், கொஞ்சம் கொஞ்சமாக அளவை அதிகரிக்க வேண்டும்.
    • முழுதானிய உணவுகள், சிவப்பரிசி, கீரை வகைகள், பீன்ஸ், பச்சைக் காய்கறிகள், பழங்கள் என ஒவ்வொரு நாள் உணவிலும் ஏதோ ஒரு வகையி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
    • சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்தை போதுமானதாக இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க முடியும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது உங்கள் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.
    • வெதுவெதுப்பான நீர் மலச்சிக்கலைத் தடுக்காமல் இருக்கலாம். ஆனால் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பருகினால், கர்ப்ப கால மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
    • உலர்பழம் மற்றும் பேரிச்சம் பழத்தை ஊற வைத்த தண்ணீரை குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் சரியாகும்.
    • செரிமான மண்டலத்திற்கு  தொந்தரவு தரும் உணவுகளை தவிர்க்க வேண்டும். மைதா பிஸ்கட், ப்ரெட், பரோட்டா போன்ற உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.(கர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சமாளிக்கும் 7 வழிகள்! - http://www.parentune.com/parent-blog/karpa-kalathil-yerpadum-ajeerna-kolarugalai-samalikum-7-vazhigal/5101)
    • முக்கியமாக இரவில் பழங்கள் மற்றும் எளிதாக செரிக்ககூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும். இரவில் அதிகம் உணவு சாப்பிட்டாலோ அல்லது நேரம் கழித்து அதிகாமாக சாப்பிட்டாலோ வயிற்றுப் பிரச்சனைகளை உண்டாக்கலம்.
    • ஒரு நாளில் மூன்று முறை வயிறுமுட்ட சாப்பிடுவதை மாற்றி ஆறு முறை கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவது மூலம் உணவு எளிதாக செரிகக் செய்து குடலுக்கு அனுப்பும்.  இதனால் மலச்சிக்கலை உருவாக்கும் வாய்ப்பு குறைகிறது.
    • நடைபயணம் மனதுக்கு மட்டுமல்ல வயிற்றுக்கும் நல்லது. தினமும் மிதமான நடைபயணம் செல்வது மூலமாக தசைகள் தளர்வடையும்.

    பின்வரும் 5 வழிகளில் நீங்கள் கர்ப்பத்தை திறம்பட நடத்தலாம்.

    நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு:

    நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது, இது போதுமான அளவு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை வழங்குகிறது. சீசன் பழங்கள், சாலடுகள், பச்சை இலைக் காய்கறிகள், பீன்ஸ், பட்டாணி மற்றும் முழு தானிய ரொட்டி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆரோக்கியமாக இருக்க கர்ப்பிணிப் பெண்கள் ஒவ்வொரு நாளும் 25 முதல் 30 கிராம் உணவு நார்ச்சத்தை உட்கொள்ள வேண்டும். முளைகள் மற்றும் கேரட் கர்ப்ப காலத்தில் அற்புதமான உணவுகள் (கர்ப்ப கால வாந்தியை தடுக்க உதவும் சில வீட்டு வைத்தியம் - http://www.parentune.com/parent-blog/karpa-kaala-vaanthiyai-thadukka-uthavum-sila-veettu-vaiththiyam/4816)

    நிறைய தண்ணீர் குடிக்கவும்:

    கர்ப்ப காலத்தில் நீரேற்றமாக இருப்பது முக்கியம். கர்ப்ப காலத்தில் உங்கள் தண்ணீரை இரட்டிப்பாக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இது உங்கள் குடல்களை மென்மையாகவும், உங்கள் செரிமான பாதையை சீராக வைக்கவும் உதவும்

    உணவுகளை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள்:

    உங்கள் தினசரி உணவை ஐந்து முதல் ஆறு வேளைகளாகப் பிரிக்க முயற்சிக்கவும் அல்லது ஒவ்வொரு 2 முதல் 3 மணிநேர காலத்திற்குப் பிறகு ஏதாவது எடுத்துக்கொள்ளவும், இது அதிக நேரம் வேலை செய்யாமல் உணவை ஜீரணிக்க அனுமதிக்கும்.

    உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருங்கள்:

    வழக்கமான உடல் செயல்பாடு மலச்சிக்கலைக் குறைக்க உதவும், ஏனெனில் உடற்பயிற்சி உங்கள் குடல் இயக்கங்களைத் தூண்டுகிறது. நீச்சல், நடைப்பயிற்சி மற்றும் யோகா போன்ற எந்த விதமான மிதமான பயிற்சிகளையும் நீங்கள் தேர்வு செய்யலாம். கர்ப்பிணிப் பெண்கள் 20 முதல் 30 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி செய்ய முயற்சிக்க வேண்டும். உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதுகாப்பான பயிற்சிகள் என்ன என்பதை உங்கள் மருத்துவரிடம் சரிபார்க்கவும்.

    தர்பூசணி ஒரு அதிசய பழம்:

    பாரம்பரியமாக பழைய காலங்களில் மருத்துவச்சிகள் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு தேநீர் தயாரிப்பதற்காக தர்பூசணி விதைகளை வேகவைத்தனர், இருப்பினும் நீங்கள் அதை ஜூஸ் இல்லாமல் பழமாக சாப்பிடலாம். தண்ணீர் நிறைந்திருப்பதால், குடல் வழியாக உணவை நகர்த்த உதவுகிறது. ஆனால் அது புதியதா மற்றும் இரசாயனங்கள் செலுத்தப்படாமல் இருக்க வேண்டும்.

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)