1. எந்த வயதிலிருந்து குழந்த ...

எந்த வயதிலிருந்து குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டும் ? எப்படி தேர்வு செய்வது?

All age groups

Radha Shri

3.1M பார்வை

4 years ago

எந்த வயதிலிருந்து  குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டும் ? எப்படி தேர்வு செய்வது?
கொரோனா வைரஸ்
பாதுகாப்பு

குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டுமா என்ற இந்த கேள்வி கொரோனா ஆரம்பித்த காலத்திலிருந்து நமக்கு தோன்றி கொண்டே இருக்கின்றது. ஆனால் மாஸ்க் அணிவது என்பது அனைவரும் பின்பற்ற பரிந்துரைக்கப்பட்ட ஒன்றாகும்.  பெரும்பாலும் குழந்தைகள் எந்த வயதில் மாஸ்க் அணிய வேண்டும்? எவ்வாறு? எந்த வகை மாஸ்க் சிறந்தது போன்ற பலவிதமான கோணங்களில் உங்களுக்கு தகவல்களை பகிர்ந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறேன்.

உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப் அறிவுறுத்துவது என்ன?

More Similar Blogs

    உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப் குழந்தைகள் மாஸ்க் அணிவது குறித்து மதிப்பாய்வு செய்து கூறுகின்றது. அதாவது குழந்தைகளின் உளவியல் தேவைகள் மற்றும் வளர்ச்சி மைல்கற்கள் போன்ற பிற காரணிகளின் அடிப்படையில் கொண்டு அறிவுறுத்தும் விஷயங்கள் பின்வருமாறு

    5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் முகமூடி அணிய தேவையில்லை. இது குழந்தையின் பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆர்வத்தையும் சார்ந்தது. சரியான முறையில் முகமூடி பயன்படுத்துவதற்கான திறனையும் அடிப்படையாக கொண்டது.

    முகமூடிகள் எவ்வாறு செயல்படுகின்றன?

    COVID-19 பாதிக்கப்பட்டவர்கள் பேசும்போது, பாடும்போது, இருமல் அல்லது தும்மும்போது வெளிவரும் சுவாச துளிகளால் பரவுகிறது. அறிகுறிகள் இல்லாமலும் வைரஸை தொற்று ஏற்படலாம்.- அதாவது நீங்களும் உங்கள் குழந்தைகளும் தொற்றுநோயாக இருப்பதை உணரக்கூட முடியாத சூழலும் இருக்கும்.

    முகமூடிகள் COVID-19 சுவாசத்துளிகள் மற்றவர்கள் மீது படுவதை தடுக்கும் தடுப்பானாக செயல்படுகின்றன. மாஸ்க் அணிந்தவர்களுக்குள் இந்த  நீர்த்துளிகள் போகாமல் மற்றும் தொற்றுநோயாக மாறாமல் பாதுகாக்க உதவும்.

    குழந்தைகளுக்கு மாஸ்க் எந்த வயதில் அணிய வேண்டும்?

    6-11 வயதுடைய குழந்தைகளுக்கு முகமூடிகளை பயன்படுத்துவதற்கான முடிவு பின்வரும் காரணிகளின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று WHO மற்றும் யுனிசெஃப் அறிவுறுத்துகின்றன:

    • குழந்தைகள் வசிக்கும் பகுதியில் பரவலாக பரவுகிறதா?
    • பாதுகாப்பாக மற்றும் சரியான முறையில் முகமூடியை பயன்படுத்துவதற்கான திறன் குழந்தையிடம் உள்ளதா?
    • முகமூடிகளை தொடர்ந்து அணிதல் -  முகமூடிகளை சலவை செய்தல் மற்றும் மாற்றுவது (பள்ளிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் போன்றவை)
    • எவ்வாறு அணிய வேண்டும், கழற்ற வேண்டும் மற்றும் பாதுகாப்பாக முகமூடிகளை அணிய வேண்டும் என்பது சார்ந்த பெரியவர்களின் போதிய மேற்பார்வை மற்றும் அறிவுறுத்தல்கள்
    • ஆசிரியர்கள், பெற்றோர்கள் / பராமரிப்பாளர்கள் மற்றும் / அல்லது மருத்துவ வல்லுநர்களிடம் கலந்தாலோசித்து கற்றல் மற்றும் உளவியல் வளர்ச்சியில் முகமூடியை அணிவதன் சாத்தியமான தாக்கம் என்ன என்பதை அறிவது.
    • வயதானவர்கள் மற்றும் பிற கடுமையான உடல்நலப் பிரச்சனைகள் கொண்டவர்கள், அதிக ஆபத்தில் இருக்கும் பிற நபர்களுடன் குழந்தை தொடர்பில் இருப்பது.

    WHO மற்றும் யுனிசெஃப் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பெரியவர்களை போலவே முகமூடியை அணிய வேண்டும் என்று அறிவுறுத்துகின்றன. குறிப்பாக மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 1 மீட்டர் தூரத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாத இடங்களில் பரவலாக பரவுகிறது.

    குழந்தைகள் எந்த வகையான முகமூடியை அணிய வேண்டும்?

    பொதுவாக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் குழந்தைகள் மருத்துவமற்ற அல்லது துணி முகமூடியை அணியலாம். இதன் மூலம் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கிறது. மேலும் அவை பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை அறிந்திருக்காத நிலையிலும் பாதுகாக்க உதவுகின்றது.

    அணியும் முகமூடி குழந்தையின் மூக்கு, வாய் மற்றும் கன்னம் மூடப்படுகிறதா மற்றும் சரியான அளவு உள்ளிட்ட விஷயங்களை பெரியவர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

    சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ், புற்றுநோய் அல்லது நோயெதிர்ப்பு தடுப்பு போன்ற அடிப்படை பிரச்சனைகளை கொண்ட குழந்தைகள், தங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசித்து, மருத்துவ முகமூடியை அணிய வேண்டும். ஒரு மருத்துவ முகமூடி வைரஸ் பரவுவதிலிருந்து பாதுகாப்பையும், அணிந்தவருக்கு வராமலும் கட்டுப்படுத்துகிறது. மேலும் COVID-19 இலிருந்து தீவிரமாக நோய்வாய்ப்படும் அதிக ஆபத்து உள்ள எவருக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. (கொரோனா பற்றி உங்கள் குழந்தையுடன் பேசுவது எப்படி – 8 உதவிக்குறிப்புகள் http://www.parentune.com/parent-blog/corona-parri-ungkal-kuzawthaiyudan-pesuvathu-eppadi-8-uthavi-kurippukal/5369)

    குழந்தைகள் முகமூடிகளை சரியாக அணிந்திருப்பதை உறுதி செய்தல்

    பல முகமூடிகள் பெரியவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் குழந்தைகளுக்கு சரியாக பொருந்தாது. உங்கள் பிள்ளைக்கு முகமூடியை வாங்கினாலும் அல்லது தயாரித்தாலும் சரி, இதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:

    • முகமூடியை போடுவதற்கு முன்பு, சானிடைஸரை கைகளில் தடவி கொள்வது,
    • சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தினால் குறைந்தது 40 வினாடிகள் கைகளை சுத்தம் செய்வது.
    • மூக்கு, வாய் மற்றும் கன்னம் ஆகியவற்றை மறைக்க முகமூடி சரியான அளவு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
    • முகமூடியின் முன்புறத்தை தொடாதது மற்றும் கன்னத்தின் கீழ் அல்லது வாய்க்குள் இழுக்காதது உள்ளிட்ட முகமூடியை எவ்வாறு சரியாக அணிய வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும்.
    • அவர்கள் முகமூடியை ஒரு பையில் அல்லது பேக்கெட்டில் வைக்க வேண்டும். முகமூடியை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
    • முகமூடியை எவ்வாறு அணிவது, எடுத்துக்கொள்வது மற்றும் கவனிப்பது பற்றிய கூடுதல் தகவல்களை குழந்தைகளுக்கு வீடியோ மூலம் அல்லது படம் மூலம் காட்டலாம்.

    மாஸ்க் - செய்ய வேண்டியது/செய்ய கூடாதது

    image

    குழந்தைகள் மாஸ்க் அணியும் போது  செய்ய வேண்டியது

    • முகமூடி அணியும்போது தொடர்ந்து கைகளை கழுவவும் மற்றவர்களிடமிருந்து தூரத்தை கடைப்பிடிக்கவும் உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்
    • ஒரு முகமூடி மட்டும் COVID-19 நோய்த்தொற்று பரவுவதை தடுக்காது - அவை மற்ற நடத்தைகளுடன் இணைந்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்.
    • குறைந்தது 40-60 வினாடிகள் சோப்பு மற்றும் தண்ணீரில் அல்லது 20-30 வினாடிகளுக்கு ஆல்கஹால் அடிப்படையிலான கரைசலுடன் அடிக்கடி தங்கள் கைகளை கழுவ வேண்டும்.
    • மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்தை கடைப்பிடிக்கவும். நெரிசலான இடங்களை தவிர்க்கவும்.
    • காற்றோட்டம் இல்லாத இடங்களை தவிர்க்கவும்.
    • நீங்கள் வெளியேறும்போது முகமூடிகளை சேமிக்க செய்யக்கூடிய பை வைத்துக் கொள்ளுங்கள்.
    • நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் முகமூடிகளை கழற்றி பகலில் மீண்டும் பயன்படுத்த திட்டமிட்டால், அவற்றை சேமிக்க சுத்தமாக செய்யக்கூடிய பைகளை எடுத்து செல்லுங்கள்.

    சில குறிப்புகள் இங்கே:

    • உங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு முகமூடிக்கும் ஒரு தனி பையைப் பயன்படுத்துங்கள்.
    • பையில் இருந்து முகமூடியை சொருகும்போது அல்லது அகற்றும்போது, ​​உட்புறத்தை தொடாமல் அதை கையாளவும். முகமூடியின் மேற்பரப்பை தொடுவதை தவிர்க்கவும்.
    • முகமூடியை மீண்டும் போடுவதற்கு முன்பு கைகளை கழுவ நினைவில் கொள்ளுங்கள்.

    மாஸ்க் அணியும் போது செய்யக்கூடாதது

    COVID Mask

    இந்த ஆறு பொதுவான தவறுகள் நேருவதை தவிர்க்கவும்

    முகமூடி அணியும்போது அடிக்கடி செய்யும் இந்த ஆறு பொதுவான தவறுகளை அவர்களால் அடையாளம் காண முடியுமா என்று உங்கள் குழந்தையிடம் கேளுங்கள். (பதில்கள் கீழே உள்ளன.)

    1. உங்கள் மூக்குக்கு கீழே முகமூடியை இழுக்க வேண்டாம்.
    2. உங்கள் கன்னம் வெளியே தெரிய வேண்டாம்.
    3. உங்கள் கன்னத்திற்கு கீழே முகமூடியை இழுக்க வேண்டாம்.
    4. முகமூடியை அணியும்போது இப்படி தொடாதே.
    5. தளர்வான முகமூடியை அணிய வேண்டாம்.
    6. அழுக்கு, சேதமடைந்த அல்லது ஈரமான முகமூடியை அணிய வேண்டாம்.

    குழந்தை வீட்டில் முகமூடி அணிய வேண்டுமா?

    COVID-19 ஐக் குறிக்கும் அறிகுறிகளை கொண்ட எந்தவொரு குழந்தையும் மருத்துவ முகமூடியை அணிய வேண்டும். குழந்தை தனிமைப்படுத்தப்பட வேண்டும், அறிகுறிகள் லேசாக இருந்தாலும் கூட, அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருக்க ஆரம்பித்தவுடன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். நோய்வாய்ப்பட்ட குழந்தையின் 1 மீட்டருக்குள் வீட்டிற்கு வரும் குடும்ப உறுப்பினர்கள் / பராமரிப்பாளர்களும் முகமூடி அணிய வேண்டும்.

    COVID-19 ஐ ஏற்படுத்தும் வைரஸுடன் நோய்வாய்ப்பட்ட அல்லது பரிசோதித்த வீட்டு உறுப்பினர்கள் முடிந்தால் மற்ற அனைவரிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட வேண்டும். வீட்டில் நோய்வாய்ப்பட்ட நபரின் 1 மீட்டருக்குள் குழந்தை வந்தால், பெரியவரும் குழந்தையும் அந்த நேரத்தில் மருத்துவ முகமூடியை அணிய வேண்டும்.

    குழந்தைகள்  விளையாடும் போது அல்லது உடல் செயல்பாடுகளை செய்யும்போது முகமூடி அணிய வேண்டுமா?

    குழந்தைகள் விளையாடும்போது அல்லது விளையாட்டு மைதானத்தில் ஓடுவது, குதித்தல் போன்ற உடல் செயல்பாடுகளை செய்யும்போது முகமூடி அணியக்கூடாது. இதனால் அவர்களின் சுவாசத்தில் சிக்கல் ஏற்படும். குழந்தைகளுக்காக இந்த நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கும்போது, ​​மற்ற அனைத்து முக்கியமான பொது சுகாதார நடவடிக்கைகளையும் ஊக்குவிப்பது முக்கியம்: மற்றவர்களிடமிருந்து குறைந்தபட்சம் 1 மீட்டர் தூரத்தை பராமரித்தல், ஒன்றாக விளையாடும் குழந்தைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துதல், சானிடைஸர் தடவுவது  போன்றவற்றை ஊக்குவித்தல்.

    முகம் கவசங்கள் போன்ற துணி முகமூடிகளுக்கு மாற்று வழிகள் உள்ளதா?

    COVID-19 இன் சூழலில், சில குழந்தைகள் குறைபாடுகள் அல்லது ஸ்பீச் தெரபி வகுப்புகள் போன்ற குறிப்பிட்ட சூழ்நிலைகள் காரணமாக முகமூடி அணிய முடியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பங்களில், முகம் கவசங்கள் முகமூடிகளுக்கு மாற்றாக கருதப்படலாம், ஆனால் அவை வைரஸ் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க அதிக பாதுகாப்பை வழங்காது. முகக் கவசத்தைப் பயன்படுத்த முடிவு செய்தால், அது முழு முகத்தையும் மூடி, முகத்தின் பக்கங்களை சுற்றிக் கொண்டு இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். எச்சரிக்கை அவசியம் தேவை.

    முகமூடிகளை அணிய குழந்தைகளை ஊக்குவிக்க உதவும் சில வழிகள்

    COVID-19 உலகெங்கிலும் உள்ள குடும்ப வாழ்க்கையை நெருக்கடிக்குள் ஆக்கியுள்ளது. மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மன வருத்தத்தை அதிகரித்துள்ளது.  இதனால் மன அழுத்தம், பதட்டம் மற்றும் சோகம் தொடர்ந்து ஏற்படுகின்றது. முகமூடிகள் பல குழந்தைகளுக்கு இத்தகைய உணர்வுகளை உண்டாக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு, முகமூடி அணிவது குழப்பமாகவும் வருத்தமாகவும், சொளகரியமாகவும் இருக்கலாம்.

    உங்கள் குழந்தைக்கு முகமூடிகளை அறிமுகப்படுத்த உதவும் சில யோசனைகள் இங்கே:

    • நேர்மையாகவும் ஆதரவாகவும் இருங்கள். முகமூடிகள் நம்மில் எவருக்கும் வேடிக்கையாக இல்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஆனால் முகமூடிகளை அணிவதன் மூலம், வயதானவர்கள் உட்பட நம்மை சுற்றியுள்ளவர்களை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க உதவலாம் என்பதை விளக்குங்கள். முகமூடி அணிவது நாம் ஒருவருக்கொருவர் அக்கறை காட்டுவதைக் காட்டுகிறது.
    • COVID-19 ஐ நிறுத்த நிறைய வல்லுநர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுங்கள். ஆனால் அவர்களுக்கு நம்முடைய உதவி தேவை. அதாவது ஒவ்வொரு முன்னெச்சரிக்கையையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
    • முகமூடி அணிவதை ஒரு பழக்கமாக மாற்றுங்கள். எனவே குழந்தைகளுக்கு தொடர்ந்து நினைவூட்டல்களை வழங்கவும், உங்கள் சொந்த நடத்தையில் நீங்கள் முன்மாதிரியாக விளங்கியும் இதை செய்யலாம்.
    • முகமூடிகளை வேடிக்கையாக அறிகுமப்படுத்துங்கள் - முகமூடி அல்லது துணியை தேர்ந்தெடுப்பதை ஒரு வேடிக்கையான செயலாக மாற்ற முயற்சிக்கவும். உங்கள் குழந்தையை முடிந்தவரை ஈடுபடுத்தவும்.
    • உங்கள் குழந்தைகள் முகமூடிகளின் தோற்றத்தை எவ்வளவு அதிகமாக விரும்புகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்களுக்கு பிடித்த வண்ணங்கள், கார்டூன் படங்கள் போன்றதை தேர்வு செய்யலாம். நீங்கள் சுற்றிலும் இல்லாதபோதும் அவர்கள் அணிய விரும்ப வேண்டும்.

    குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவது தொடர்பான பல கேள்விகளுக்கான பதில்களை பார்த்தோம். இந்த பதிவு உங்களுக்கு நிச்சயமாக உதவும் என நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.  

    Reference

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)