1. 12-15 வயதினருக்கான 'கோர்ப ...

12-15 வயதினருக்கான 'கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி தயார்! பெற்றோர்கள் என்ன சொல்கிறார்கள்?

All age groups

Bharathi

3.2M பார்வை

3 years ago

12-15 வயதினருக்கான 'கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி தயார்!  பெற்றோர்கள் என்ன சொல்கிறார்கள்?
நோய் எதிர்ப்பு சக்தி
தடுப்பூசி

தமிழகத்தில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மத்திய அரசு 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு ‘கோர்பேவேக்ஸ்’ என்ற புதிய தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது. தமிழகத்தில் 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சுமார் 10 லட்சம் சிறுவர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் மத்திய அரசு 21 லட்சத்து 66 ஆயிரம் தடுப்பூசிகள் என இலக்கு நிர்ணயித்து ஒதுக்கீடு செய்துள்ளது.

12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு எப்போது தடுப்பூசி போட வேண்டும்?

More Similar Blogs

    சென்னைக்கு நேற்று 3 லட்சத்து 89 ஆயிரம் ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசிகள் வந்துள்ளன. அந்த தடுப்பூசிகளை தற்போது ஆய்வு செய்துள்ளோம். 12 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு எப்போது தடுப்பூசி போட வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு முறையாக அறிவித்தவுடன் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.

     விரைவில் மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த தடுப்பூசியை பொருத்தவரை, கோவேக்சின் தடுப்பூசியை போல, முதல் தவணை செலுத்தி 28 நாட்கள் கழித்து 2-வது தவணை செலுத்தப்படும். மத்திய அரசு அனுமதித்ததும், பள்ளிகளில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும்.

    தற்போது இந்தியாவில் தமிழகத்தில் தான்  பள்ளிகளில் 15 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அதிகமாக தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில், 12-18 வயதினருக்கு என்னென்ன தடுப்பூசிகள் கிடைக்கின்றன?

    இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் 12 வயது வந்தோர் குழந்தைகளுக்கு அவசர நிலை பயன்பாட்டிற்காக கோவாவாக்ஸ் என்ற மருந்தை கண்டறிந்து உள்ளனர். சீரம் இன்ஸ்டிடியூட் உரிய அனுமதி அளிக்கப் பிறகு இதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவார்கள். கோவாக்சின் மற்றும் ZyCoV-D ஆகியவை இளம் வயதினருக்கு தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்டுள்ளன

    கோர்பேவாக்ஸ் மூன்றாவது தடுப்பூசி..

    தமிழகத்தில் 12 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கு விரைவில் தடுப்பூசிப் போட தொடங்க உள்ளது

    ஏன் 12-18 வயதினருக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசி அனுமதிக்கப்படுகிறது?

    நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்.டி.ஏ.ஜி.ஐ) தலைவர் டாக்டர் என்.கே. அரோரா, கோர்பேவாக்ஸ் தடுப்பூசி பாதுகாப்பானது என்றும், வேறு சில வெக்டர் தடுப்பூசிகளுடன் ஒப்பிடும்போது நல்ல நோயெதிர்ப்புத் திறன் மற்றும் அதிக ஆன்டிபாடி அளவை வழங்குவதாகவும் கூறினார்.

    Corbevax தடுப்பூசி 12 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான DCGI இன் பொருள் நிபுணர் குழுவிடமிருந்து (SEC) அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தைப் (EUA) பெற்றுள்ளது.

    Corbevax பற்றிய தகவல்கள்

    • இது ஒரு ஏற்பி பிணைப்பு டொமைன் புரத துணை அலகு கோவிட் தடுப்பூசி ஆகும். இது இரண்டு தவணையாக போடப்பட உள்ளது. (0.5 ml) முதல் டோஸ் போட்டு 28 நாட்கள் கழித்து இரண்டாம் டோஸ் போடப்பட உள்ளது.
    • இந்த தடுப்பூசி மருந்துகள் 2-8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கப்பட வேண்டும். இது 5ml 10 டோஸ்களாகவும், 10ml 20 டோஸ்களாகவும் அளவுகளை கொண்ட மருந்தாக பயன்பாட்டிற்கு வருகிறது.
    • இது கடந்த டிசம்பர் மாதம் அவசர நிலையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கோர்பேவாக்ஸ் மற்றும் கோவாவக்ஸ் 18 வயது நிரம்பிய மாணவர்களுக்கு அவசர பயன்பாட்டிற்கு ஏற்கனவே அனுமதி அளித்தது.
    • ஆகவே கோர்பிவாக்ஸ் தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வாங்கியப்பின் 12-17 வயது குழந்தைகளுக்கு போடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு COVID-19 க்கு எதிராக தடுப்பூசி போட ஏன் இன்னும் தயங்குகிறார்கள் என்பதற்கான காரணங்களை பார்க்கலாம்..

    சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள Kaiser Family Foundation (KFF) கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றி பொதுமக்களின் அணுகுமுறைகள் மற்றும் அனுபவங்களை கண்காணிக்க ஒரு ஆராய்ச்சியை நடத்தியது.

    • 12-17 வயதுடையவர்களிடையே தடுப்பூசி எடுப்பது குறைந்துவிட்டதாக குறிப்பிடுகிறது.
    • பாதிப் பெற்றோர்கள் தங்கள் டீன் ஏஜ் பிள்ளைகள் தடுப்பூசி போட்டுவிட்டதாகவும் அல்லது உடனே செய்துவிடுவார்கள் என்று கூறுகிறார்கள்.
    • 5-11 வயதுடையவர்களில் (27%) பத்தில் மூன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு தடுப்பூசியை அனுமதித்தவுடன் பெற ஆர்வமாக உள்ளனர், அதே நேரத்தில் மூன்றில் ஒருவர் தடுப்பூசி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்க சிறிது காலம் காத்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
    • பத்தில் மூன்று பெற்றோர்கள் தங்கள் 12-17 வயது (31%) அல்லது அவர்களின் 5-11 வயதுடைய (30%) தடுப்பூசியைப் பெற மாட்டார்கள் என்று கூறுகிறார்கள்.

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிப் போடுவார்களா? போட மாட்டார்களா? பகிர்ந்து கொண்டது என்ன?

    வின்னரசி – 12 வயது மற்றும் 15 வயது மகன்கள்

    என் மகன்களுக்கு தடுப்பூசிப் போடுவது குறித்து இப்போதைக்கு என்னால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. ஏன்னென்றால் கொரோனா தடுப்பூசிப் மூலம் ஏற்படும் விளைவுகள் எதிர்காலத்தில் பிள்ளைகளின் நலனை பாதிக்குமோ என பயப்படுகிறேன். பக்க விளைவுகளை பார்த்த பிறகு தான் தடுப்புசிப் போடுவது குறித்து முடிவு செய்வேன்.

    ப்ரியா – 10 வயது மற்றும் 16 வயது மகன்கள்

    நானும் முதலில் தடுப்பூசி போட வேண்டாம் என்று நினைத்திருந்தேன். காரணம், தடுப்பூசிப் போட்டவுடன் உடனே காண்பிக்கும் அறிகுறிகள் எனக்கு பயத்தை ஏற்படுத்தியது. ஆனால் என் மகனின் பள்ளியில் தடுப்பூசி போடாமல் பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை. அதனால் தடுப்பூசிப் போட்டுக் கொண்டேன். நான்  பயந்த மாதிரி எதுவும் மோசமான விளைவுகள் அவனுக்கு தோன்றவில்லை. முதலில் தயங்கினேன். ஆனால் தடுப்பூசி போட்ட பிறகு தைரியமாக உள்ளது. பிள்ளைகள் பள்ளி, வெளியிடங்களுக்கு செல்ல தடையிருக்கக்கூடாது. என் மகனின் கல்வி, மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு முடிவு எடுத்தேன்

    சுமித்ரா - 13 வயது மகள் மற்றும் 18 வயது மகன்

    நான் நிச்சயமாக தடுப்பூசிப் போட்டுக் கொள்ள தயாராக உள்ளேன். என் மகன் ஏற்கனவே கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்டான். அதனால் என் மகளுக்கும் போடுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. அதே போல் என் உறவினர்களின் பிள்ளைகளும் தடுப்பூசிக் போட்டுக் கொண்டனர். என் 13 வயது மகளுக்கு தடுப்பூசிப் போட ஆரம்பித்தவுடன் கண்டிப்பாக போட்டுக் கொள்வேன்.

    தடுப்பூசியின் விளைவுகளைப் பார்த்த பயப்பட அவசியமில்லை. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் போது என்ன விளைவுகள் இருக்குமா, அதாவது, ஊசிப் போட்ட இடத்தில் வலி, ஒரு நாள் காய்ச்சல் அவ்வளவு தான் அதன் பிறகு அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடுகிறார்கள். பிள்ளைகளின் பாதுகாப்பு தான் முதன்மையானது.

    12-18 வயதினருக்கு எந்தெந்த நாடுகள், என்னென்ன தடுப்பூசிகள் பரிந்துரை செய்யப்படுகிறது:

    அமெரிக்கா12-15 வயதிற்குட்பட்டவர்களுக்கான ஃபைசரின் ஷாட்களை மே மாதத்தின் நடுப்பகுதியில் போட தொடங்கின. மற்றும் 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் வகுப்பில் கலந்துகொள்வதற்கு அமெரிக்க பள்ளி வாரியங்கள் கட்டாயமாக்குவதற்கு முடிவெடுத்துள்ளன.

    ஐரோப்பிய நாடுகள்:  ஃபைசர் மற்றும் பயோஎண்டெக் தடுப்பூசிகள் ஐந்து முதல் 11 வயதுடைய குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

    சீனா: ஜூன் மாதத்தில், மூன்று வயது முதல் 17 வயது வரை உள்ள சில குழந்தைகளுக்கு மருந்து தயாரிப்பாளரான சினோவாக் தயாரித்த தடுப்பூசியின் ஷாட்களை வழங்க சீனா அனுமதிக்க தொடங்கியது, இது இளம் வயதினருக்கான தடுப்பூசியை அங்கீகரித்த முதல் நாடு.

    ஜப்பான்: 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியைப் பயன்படுத்த ஜப்பான் மே 28 அன்று ஒப்புதல் அளித்தது.

    டென்மார்க்:  (12 முதல் 15 வயது வரை) மற்றும் ஸ்பெயின் (12 முதல் 19 வயது வரை) இருவரும் இப்போது மக்கள் தொகையில் பெரும்பாலான குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர்.

    இத்தாலி - Pfizer-BioNTech தடுப்பூசியின் பயன்பாட்டை 12-15 வயதுடையவர்களுக்கு நீட்டிக்க இத்தாலி ஒப்புதல் அளித்தது.

    ஜெர்மனி : ஜூன் 7 முதல் 12-16 வயதுள்ள குழந்தைகளுக்கு முதல் ஷாட் வழங்க ஜெர்மனி திட்டமிட்டுள்ளது, அதே நேரத்தில் போலந்து 12-15 வயதுடையவர்களுக்கு அதே நாளில் ஷாட்களை வழங்கும்.

    பிரான்ஸ்: 12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களில் 66% பேர் இப்போது முதல் ஷாட்ஸ் போடப்பட்டது, மேலும் 52% பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். ஜூன் மாதத்திற்குள் 16-18 வயதுடைய பதின்ம வயதினருக்கு தடுப்பூசி போடத் தொடங்கலாம், 12-15 வயதுடையவர்கள் பள்ளி ஆண்டு தொடக்கத்தில் தடுப்பூசிகளைப் பெறுவார்கள்.

    ஆஸ்திரியா: விண்டோபோனா என்ற செய்தி தளத்தின்படி, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 12-15 வயதுடைய 340,000 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை ஆஸ்திரியா நோக்கமாகக் கொண்டுள்ளது.

    பிரிட்டிஷ்: 12-15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசியைப் பயன்படுத்த ஒப்புதலைப் பெறுவதாக மே நடுப்பகுதியில் ஃபைசர் கூறியது.

    சுவிட்சர்லாந்து: சுவிட்சர்லாந்தின் சுகாதார கண்காணிப்பு அமைப்பு, மே மாத தொடக்கத்தில் ஃபைசர் 12-15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஷாட் எடுப்பதற்கு அனுமதி கோரியதாகக் கூறியது.

    நார்வேஜூலை 2021 வரை, 12 முதல் 17 வயதுடையவர்களில் 42% பேர் முதல் டோஸையும் 32% பேர் இரண்டாவது டோஸையும் பெற்றனர்.

    இஸ்ரேல்: இஸ்ரேல் தனது தடுப்பூசி இயக்கத்தை ஜனவரியில் 16-18 வயதுடையவர்களுக்கு விரிவுபடுத்தியது, மேலும் இந்த வாரம் 12-15 வயதுடையவர்களுக்கான தடுப்பூசிகளை அங்கீகரிப்பது குறித்து திட்டமிட உள்ளது

    துபாய்: 12-15 வயதுடையவர்களுக்கு Pfizer-BioNTech தடுப்பூசியை வழங்கத் தொடங்கியதாக ஜூன் 1 அன்று துபாய் கூறியது, மே மாதத்தின் நடுப்பகுதியில் அதே வயதினருக்கு அவசரகால பயன்பாட்டிற்கான ஷாட்டை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனுமதித்த பிறகு.

    சிங்கப்பூர் ஜூன் 1 முதல் 12-18 வயதுடைய இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி திட்டத்தை ஆரம்பித்தது.

    Be the first to support

    Be the first to share

    support-icon
    Support
    bookmark-icon
    Bookmark
    share-icon
    Share

    Comment (0)

    Related Blogs & Vlogs