கொரோனா (COVID-19) - கர்ப ...
பொதுவாகவே கொரோனா வைரஸ் பற்றி வரும் செய்திகள் பல கேள்விகளையும், குழப்பங்களையும் எழுப்புகின்றது. அந்த வகையில் கர்ப்பிணிகளுக்கு என்ன மாதிரி பாதிப்புகள் ஏற்படுகின்றது. அதாவது கர்ப்பிணிகளுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்படுமா? அப்படியே நோய் தொற்று ஏற்பட்டால் என்ன மாதிரி பாதிப்புகள் உண்டாகும்? கருவில் உள்ள குழந்தைக்கு என்ன மாதிரி பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு? என பல சந்தேகங்கள் வரும்.கர்ப்பிணிகள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகளை பார்க்கலாம்.
கொரோனா வைரஸ் என்றால் என்ன ?
முதலில் இந்த புது வகை வைரஸ் பற்றி சில விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள். உலகில் இதற்கு முன் MERS, SARS போன்ற பல வைரஸ்களை நாம் கடந்து வந்திருக்கிறோம். இந்த வரிசையில் கடந்த 2 மாதங்களில் (COVID-19) வைரஸால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
கொரோனா வைரசால் கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு உண்டா?
இந்த வைரஸ் தாக்குதலுக்கு கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்பது ஒரு ஆறுதலான செய்தி. பொதுவாகவே கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். அதனால் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், சுவாசப் பிரச்சினை உடையவர்கள் ரத்தக்கொதிப்பு, இதயம் சார்ந்த பாதிப்புகள் உள்ளவர்கள் எப்படி இந்த வைரஸில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்துகிறோமோ அவ்வளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கர்ப்பிணிப் பெண்களும் எடுக்க வேண்டியது அவசியம்.
எந்த வகை பாதிப்புகள் ஏற்படுகிறது?
மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதற்கு ஆய்வுகள் ஏதும் இல்லை என்பது சற்று ஆறுதல் அடையும் செய்தி. கர்ப்பிணி பெண்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும் இதனால் Covid-19 மற்றும் அதே போன்ற மற்ற தொற்று ஏற்பட்டால் நோய் எதிர்ப்பு திறன் குறையலாம். கர்ப்ப காலத்தில் நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வது மிக மிக அவசியம்.
கர்ப்பம் உள்ள தாய் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் இந்தத் தொற்றுப் பரவ வாய்ப்பு உள்ளதா?
இந்த வைரஸ் மனிதர்களில் இருந்து மனிதருக்கு பரவும் தன்மை கொண்டது, ஆனால் தாயிலிருந்து கருவில் இருக்கும் குழந்தைக்கு பரவும் என்று எந்த ஆய்விலும் நிரூபணமாகவில்லை, வயிற்றில் இருக்கும் பனிக்குட நீரில் காட் பிளட் மற்றும் தாய்ப்பால் மூலமாகவும் இது பரவாது.
கொரோனா தொற்று இருந்தால் அறிகுறிகள் என்ன?
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சளி, இருமல் அல்லது மிதமான அல்லது கடுமையான காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், உடல்வலி போன்றவை முக்கிய அறிகுறிகள்.
இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு , early pregnancy போன்ற எந்த அறிக்கையும் உறுதிப்படுத்தவில்லை.
கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள தாய் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா?
தாய்ப்பால் மூலமாக இந்த வைரஸ் தொற்று பரவாது என்று ஆய்வு கூறுகிறது, தாய்ப்பால் கொடுக்கும் பொழுது மிக கவனமாக இருக்க வேண்டும். கைகளை நன்கு கழுவிய பின்பு தான் தாய்ப்பால் கொடுக்க வேண்டும், பால் கொடுக்கும் பொழுது இருமல் தும்மல் இல்லாமல் மாஸ்க் அணிந்து பால் கொடுக்கலாம்.
Covid-19 தொற்றிலிருந்து கர்ப்பிணி பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி?
பொதுவாக இந்த வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவருக்கும் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற சொல்கிறோமோ அவை அனைத்தையும் இன்னும் அதிக விழிப்புணர்வோடு கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற வேண்டும்.
ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு இந்த covid -19 வைரஸ் இருந்தாலும் எந்த அறிகுறியும் இருக்காது. இவர்களை ஆங்கிலத்தில் silent carriers என்று அழைக்கிறார்கள். இவர்கள் இருமும் போது, தும்மும் போது அருகில் கர்ப்பிணிகள் இருந்தால் அவர்களுக்கு உடனே பரவ வாய்ப்புகள் அதிகம். அதனால் வீட்டிற்குள் இருந்தாலும் இடைவெளியை பின்பற்றுவது நல்லது.
கர்ப்பிணிகளில் மிக மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பிரசவத்தின்போது பிரச்சினைகள் இருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றது. அதற்கு காரணம் இந்த Covid-19 தொற்றுப் பற்றி தெளிவான அறிக்கை இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான ஆய்வறிக்கை வந்து கொண்டிருப்பதால் கர்ப்பிணிகள் மிக கவனமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதே அவர்களுக்கு பாதுகாப்பாகும். அச்சப்பட வேண்டாம், இப்போது உங்களுக்கு ஆரோக்கியமான மனநிலை அவசியம் என்பதால் அதிகமாக கரோனா பற்றிய செய்திகளை பார்த்து பதற்றமடையாமல் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கான விஷயங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளியுங்கள். உங்கள் பிரசவம் இனிமையாக வாழ்த்துக்கள்.
Be the first to support
Be the first to share
Comment (0)