கொரோனா அறிகுறிகள் இருந்தா ...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல லட்சம் பேர் பாதிப்படைந்து வரும் நிலையில் கர்ப்பிணிப் பெண்களும் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் இதன் தாக்கம் எந்த அளவில் இருக்கிறது என்பது எல்லோருடைய பதற்றமாகவும் இருக்கிறது . முக்கியமாக கொரோனா அறிகுறிகள் இருக்கும் போது தங்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாமா வேண்டாமா அல்லது தாய்ப்பால் கொடுக்கும் போது என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்? தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தங்கள் குழந்தைக்கு இதனால் அந்த வைரஸ் தொற்று ஏற்படுமா ? போன்ற பல கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றது.
பல நாடுகளில் கொரோனா அறிகுறி உள்ள தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதற்கு சில முக்கிய வழிமுறைகளை வலியுறுத்துகின்றன. அதேபோல் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த Covid-19 வைரஸில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவுறுத்துகின்றனர். ஆனாலும் தாய்மார்களுக்கு இது ஒரு பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மற்றும் UNICEF தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சில வழிமுறைகளை பின்பற்ற சொல்கிறார்கள்.
COVID-19 எவ்வாறு பரவுகிறது என்பது பற்றி அதிகம் தெரியாத சூழலே நிலவுகிறது. இன்ஃப்ளூயன்ஸா (காய்ச்சல்) மற்றும் பிற சுவாச நோய்க்கிருமிகள் எப்படி பரவுகிறதோ அதாவது பாதிக்கப்பட்ட நபர் இருமும் போதும் தும்மும் போதும் இந்த சுவாச துளிகள் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது அதேபோல் தான் கொரோனா வைரஸும் பரவுகிறது. ஆனால் தாய்ப்பால் வழியாக நோய்க்கிருமி பரவும் என்பதற்கு எந்த ஆய்வும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் தாய்ப்பால் கொடுக்கும்போது தாய்மார்கள் பல விதங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவது அவசியம்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் - பிற தொற்று நோய்கள் உள்ள போது தாய்ப்பால் கொடுப்பதற்கான வழிகாட்டுதல்
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஒரு முக்கியமான ஊட்டச்சத்தாகும். குழந்தையை பல நோய்களிலிருந்து தாய்ப்பால் பாதுகாக்க உதவுகின்றது. சில குறிப்பிட்ட காரணங்களுக்காக மட்டுமே தாய்ப்பால் வழங்க பரிந்துரைப்படவில்லை. கொரோனா அறிகுறிகள் இருந்தாலோ அல்லது வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள் குழந்தைக்கு நோய் பரவாமல் இருக்க தாய்ப்பால் கொடுக்கும் போது சில வழிமுறைகளை அவசியம் பின்பற்றப்பட வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கொரோனா வைரஸ் தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அல்லது தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு பரவும் என எந்த ஆய்வும் இல்லை. அதனால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் இருமும்/தும்மும் போது வரும் நீர்த்துளிகள் மூலமாக குழந்தையை நோய் கிருமி தாக்கும். மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது அவசியம்.
எனவே, குழந்தையைப் பாதுகாக்க நீங்கள் எடுக்க வேண்டிய படிப்படியான முன்னெச்சரிக்கைகள் இங்கே:
டிஸ்யூ பயன்படுத்துதல் - மாற்றாக, தாய்ப்பால் கொடுக்கும் போது இருமல் அல்லது தும்முவதற்கு டிஸ்யூவை பயன்படுத்தலாம். பயன்படுத்திய டிஸ்யூவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மீண்டும் பயன்படுத்த வேண்டாம், அப்புறப்படுத்திய பின் கைகளை குறைந்தது (30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை) நன்கு கழுவுங்கள்.
தாய்ப்பால் கொடுக்க மின்சாரம் அல்லது கையால் பம்பைப் பயன்படுத்துதல்
இப்போதுள்ள சூழ்நிலைகளில் இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். குறிப்பாக தொற்று காரணமாக நீங்கள் தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையே என்று எண்ணி சோர்வாக இருக்கும்போது. இந்த மாதிரி முறையைப் பயன்படுத்தி தொடர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியும்.
பின்வரும் ஆலோசனைகளை கவனித்துக் கொள்ளுங்கள்:
மற்றவர் பம்ப்பை சுத்தப்படுத்துதல்:
தாய்ப்பாலை சேமித்து வைத்தல்:
பம்ப்பை எவ்வாறு சுத்தம் செய்வது?
நினைவில் கொள்ளுங்கள், இந்த வைரஸ் மிகவும் புதியது மற்றும் தனித்துவமான முறையில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதால். சிறந்த வல்லுநர்கள் கூட எந்தவொரு உறுதியான முடிவோ கருத்துகளோ சொல்ல இயலாத நிலையே தற்போது இருக்கின்றது. ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு அதிர்ச்சிகரமான தகவல் வந்து கொண்டிக்கிறது.உங்களுக்கு அறிகுறி இருந்தால் மருத்துவரை நாடி ஆலோசனைகளை பின்பற்றுங்கள்.
எனவே, முன்னெச்சரிக்கைதான் இப்போது இருக்கின்ற சிறந்த சிகிச்சையாகும். சுருக்கமாக - சமூக தூரத்தை கடைப்பிடிக்கவும், கைகளை கழுவவும், முகத்தை மறைக்கவும், சுகாதாரமாக இருப்பதன் மூலமாக நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். நமக்கும் நமது சமூகத்திற்கும் பொது மக்களாகிய நாம் செய்யக்கூடிய மிகச் சிறந்த கடமை இதுவே.
Be the first to support
Be the first to share
Comment (0)