கொரோனா 3 வது அலையில் எப்ப ...
ஏன் இந்த தொற்று அலைகளாக மாறுகின்றது என்ற சந்தேகம் எல்லோருமே இருக்கின்றது. அதாவது வைரஸ் மாற்றமடையும் போது, அதிக பாதிப்பு ஏற்படுத்தும் வகைகள் உருவாகின்றன. 1918-ல் ஸ்பானிஷ் காய்ச்சலின் போதும், 2009-ல் பன்றி காய்ச்சலின் போதும் இதே மாதிரி சூழல் தான் இருந்தது. சுவாச பாதிப்பு ஏற்படுத்தும் வைரஸான கொரோனா அலைகளாக தாக்கும்.
எப்போதும் கொரோனா தொற்று குறைந்தவுடன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். அப்போது நாம் மாஸ்க் அணியாமல், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல், கைகளை சுத்தமாக வைக்காமல் இருப்பது, தடுப்புமுறைகளை முறையாக பின்பற்றாமல் இருந்தால் புதிய அலை உண்டாகும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இரண்டாம் அலையில் பெரும்பாலான குழந்தைகள் லேசான அறிகுறிகளோடும் அல்லது அறிகுறி இல்லாமலும் இருந்தார்கள். குறிப்பாக வீட்டில் 10 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் காணப்பட்டது. இதிலும் வீட்டில் மற்றவர்கள் கொரோனாவல் பாதிக்கப்பட்டது தான் இந்த குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக அமைந்தது.
அதனால் பெற்றோர்கள் பயப்பட வேண்டாம். மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது என்பது எப்போதுமே சிறந்தது. ஏனென்றால் மிதமான அறிகுறி அல்லது தீவிர அறிகுறிகளை குழந்தைகளிடம் நம்மால் தீர்மானிக்க இயலாது. குழந்தையைத் தொடர்ந்து கண்கானித்துக் கொண்டே இருப்பது நல்லது. குழந்தைகளின் இயல்பான நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தால், மிகுந்த சோர்வு, தொடர்ந்து 4 நாட்களுக்கு மேல் காய்ச்ச போன்ற அசாதாரண அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.
கொரோனாவின் அடுத்தடுத்த அலைகளால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதை நிரூபிப்பதற்கான எந்தவொரு தரவும் இந்திய அளவிலோ அல்லது சர்வதேச அளவிலோ இல்லை என்று டெல்லி எய்ம்ஸ் கூறியிருக்கிறது.
மேலும் இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இணை நோய் அதாவது பிறவி இதய நோய், நீரிழிவு நோய், ஆஸ்துமா அல்லது குழந்தைப் பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நோய் எதிர்ப்பு திறன் குறைந்த குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நிலை இருந்தது. லேசான அறிகுறி உள்ள குழந்தைகள் வீட்டிலேயே மருந்துகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி குணமடைந்தனர்.
மூன்றாம் அலையிலும் இணை நோய் உள்ள குழந்தைகளின் பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். காய்ச்சல், சளி போன்ற அறிகுறி இருந்தாலும் முன்னதாகவே என்ன தொற்று என்பதை கண்டறிந்து சிகிச்சை கொடுப்பது அவசியம்.
உலகில் மூன்று அலைகளையும் முதலில் கண்ட நாடுகள் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா. இந்த மூன்று நாடுகளும் மூன்றாம் அலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகள். மூன்றாம் அலை 6 முதல் 8 மாதங்களுக்குள் வர வாய்ப்புள்ளதாக மருத்துவ உலகம் கணித்துள்ளது.
ஏன் இந்த பதட்டம் என்பதற்கு உதாரணமாக இருப்பது அமெரிக்கா தான். வேறெந்த சான்றும் இல்லை. அமெரிக்காவில் இரண்டாம் அலையில் 3% குழந்தைகள் பாதிக்கப்பட்டார்கள். அதே மூன்றாம் அலையில் 33 % குழந்தைகள் பாதிக்கப்பட்டார்கள். அதனால் தான் இந்த அச்சம் மற்ற நாடுகளுக்கும் பரவத் தொடங்கியுள்ளது.
இரண்டாம் அலையில் குழந்தைகளுக்கு முதல் அலையை விட அறிகுறிகள் அதிகம் காணப்பட்டது. மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் வருவதற்கான தொற்றாக மாற வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதில் நிம்மதியடையும் விஷயம், 95 % சதவிகித குழந்தைகள் ஆபத்தான பாதிப்புள்ள அறிகுறிகளோடு இருப்பதில்லை. மீதி 5 சதவிகிதம் குழந்தைகலே ஆபத்தான நிலைக்கு செல்வதால் பெற்றோர்கள் பதற்றம் அடைய அவசியமில்லை. குழந்தைகளுக்கு நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல், எப்போதும் சோர்வு, சாப்பிட இயலாமை, சருமத்தில் சிவப்புத் திட்டுகள் இருந்தால் உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். தாமதிக்காமல் மருத்துவமனைக்கு செல்லவும்.
குழந்தையின் முதல் 5 வயது என்பது அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு முக்கியமான பருவமாகும். இந்த நெருக்கடியான சூழலில் பெற்றோர் நாள் முழுவதும் ஈடுபட வைப்பது கடினம் தான். ஆனால் அவர்களின் வயதுகேற்ற மைற்கற்களை அடைவதற்கான சூழலை வீட்டிற்குள் உருவாக்கி கொடுக்க வேண்டியது அவசியம். என்னென்ன வழிகளில் உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவலாம்.
கொரோனா மூன்றாவது அலையை கண்டு அச்சம், பதட்டம் அடையாமல் குழந்தைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அனைவரும் சேர்ந்து பின்பற்ற வேண்டும். சின்ன சின்ன விஷயங்கள் மூலம் குழந்தைகளுக்கே தங்களை பாதுகாப்பது குறித்த அறிவை வளர்க்க வேண்டும். விழிப்போடு இருப்போம், மூன்றாம் அலையையும் வெல்வோம்.
Be the first to support
Be the first to share
Comment (0)